நாட்டின் மிகவும் பிரபலமான சங்கிலித்தொடர் மருத்துவமனைகளில் ஒன்று மணிப்பால் மருத்துவமனைகள். 2010ம் ஆண்டில் ரஞ்சன் பை என்பவரால் மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் தற்போது பெங்களூரு, மங்களூர்,மைசூர், சேலம்,விஜயவாடா, பாலம்விஹார், ஜெய்ப்பூர், பாட்டியாலா, துவாரகா, கோவா, காசியாபாத், புனே மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 9,500க்கும் மேற்பட்ட படுக்கைகள் மற்றும் 5,000க்கும் அதிகமான மருத்துவர்களை கொண்ட 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை மணிப்பால் என்டர்பிரைசஸ் நடத்தி வருகிறது.
2023 ஏப்ரலில் பிரபல சர்வதேச முதலீட்டு நிறுவனமான டெமாசெக், மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை வாங்கியது. அதில் 8 சதவீத பங்குகளை கடந்த ஆண்டு விற்பனை செய்தது. மூலதனத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் ஐபிஓவில் களம் இறங்கி விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டி நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்குள் பங்குச் சந்தைகளில் பங்குகளை பட்டியலிட வேண்டும் மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் உறுதியாக உள்ளதாக தகவல்.
எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் 100 கோடி டாலர் புதிய பங்கு வெளியீட்டுக்கான (ஐபிஓ) வரைவு ஆவணங்களை தாக்கல் செய்ய மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் என்டர்பிரைசஸ் திட்டமிட்டுள்ளதாக இது தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஐபிஓ நிர்வகிக்க கோடக் மகிந்திரா கேபிட்டல், ஜேபி மோர்கன், ஆக்சிஸ் கேபிட்டல ஜெஃபரிஸ் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளது. அதேசமயம் இது தொடர்பாக எந்தவொரு ஆணைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தியாவின் டாப் 3 மருத்துவமனைகளில் ஒன்றான மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம் 2025-26ம் நிதியாண்டு இறுதிக்குள் நிறுவனத்தின் மதிப்பு 800 முதல் 1,000 கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் ஐபிஓவின் போது, நிறுவனத்தின் தற்போதைய முதலீட்டாளர்களில் சிலர் ஆஃபர் பார் சேல் முறையில் கணிசமான பங்குகளை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. மணிப்பால் நிறுவனம் புதிய பங்குகளை விற்பனை செய்தவன் மூலம் ரூ.5,000 கோடி முதல் ரூ.6,000 கோடி வரை திரட்டக்கூடும் என தகவல்.
இந்த ஐபிஓ நடைபெற்றால், அது நாட்டின் சுகாதாரத் துறையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும். கடந்த 2023ம் நிதியாண்டில் மணிப்பால் ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.4,800 கோடி ஈட்டியுள்ளது. 2022ம் நிதியாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.4,000 கோடி ஈட்டியிருந்தது.


Click it and Unblock the Notifications