இந்தியாவில் உற்பத்தி துறை கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து மந்தமான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் மே மாதத்தில் அதிகளவிலான உற்பத்தி குறைந்து ஏப்ரல் மாத அளவை விடவும் குறைந்துள்ளது.
நிக்கி மார்கிட் இந்தியா அமைப்பு வெளியிட்ட உற்பத்தி பிஎம்ஐ குறியீடு அளவு மே மாதத்தில் 51.6 குறைந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 52.5 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மே மாதத்தில் குறைந்தாலும், தொடர்ந்து 5 மாதங்களாக இந்திய உற்பத்தி சந்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே உள்ளது. பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் சந்தை வளர்ச்சி பாதையில் உள்ளது என்பது பொருள்.
குறைவான ஆர்டர்கள் வந்த காரணத்தால் இந்தியாவின் உற்பத்தி துறை கடந்த 3 மாத காலமாக தொடர்ந்து பாதிப்பு அடைந்து வருகிறது. மேலும் பணமதிப்பிழப்பு காரணமாக நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதமாக குறைந்துள்ளது. பணமதிப்பிழப்பு உற்பத்தி துறையும் பாதித்தது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஜூன் 6 மற்றும் 7 ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது, இதில் வட்டி விகிதத்தை குறைத்தால் சந்தையில் மாற்றம் ஏற்படும் இல்லையெனில் சந்தை கணிசமான அளவில் மட்டுமே வர்த்தகத்தை பெறும்.


Click it and Unblock the Notifications