ஒவ்வொரு வாரமும், சந்தை மூலதனங்களில் புதுப்பிக்கப்பட்ட விபரங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இந்திய சந்தைகளில் டாப் 10 மோஸ்ட் வேல்யூட் மதிப்பை கொண்ட நிறுவனங்கள் ஒவ்வொரு வாரமும் அவற்றின் சந்தை மதிப்பின் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு வாரமும் அவற்றின் பங்குகள் மீதான முதலீட்டாளர்கள் ஆர்வத்திற்கு மத்தியில் இவை மாறுகின்றன. முந்தைய வாரத்தில் ஏர்டெல் தனது சந்தை மூலதனத்தை அதிகபட்சமாக உயர்த்திய நிலையில், இந்த வாரத்தில் இரு வங்கிகள் உயர்த்தியுள்ளன.
அதேபோல், சென்ற வாரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 1,359.51 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இது 84,544.31 ஆக இருந்தது. அதே நேரம் அதிகபட்சமாக 1,509.66 புள்ளிகள் வரை உயர்ந்து அனைத்து நேர உயர்வை எட்டி 84,694.46 புள்ளிகள் என்ற வாழ்நாள் இன்ட்ரா-டே உச்சத்தை எட்டியது.

ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகளில் ஏற்பட்ட உச்ச நிலை காரணமாக சென்ற வாரத்தில் அதிகபட்ச சந்தை மூலதனத்தை உயர்த்தியுள்ளன. டாப்-10 மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு கடந்த வாரம் ரூ.1,97,734.77 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் மதிப்பு சென்ற வாரத்தில் ரூ.63,359.79 கோடி உயர்ந்து ரூ.9,44,226.88 கோடியாக உயர்ந்துள்ளது. இது முதல் 10 நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், எச்டிஎஃப்சி வங்கி ரூ.58,569.52 கோடியைச் அதிகரித்து அதன் சந்தை மதிப்பை ரூ.13,28,605.29 கோடியாக உயர்த்தியுள்ளது. மேலும், பார்தி ஏர்டெல்லின் மதிப்பு ரூ.44,319.91 கோடி உயர்ந்து ரூ.9,74,810.11 கோடியாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் ரூ.19,384.07 கோடி அதிகரித்து ரூ.20,11,544.68 கோடியாக இருந்தது. ஹிந்துஸ்தான் யூனிலீவரின் மதிப்பு ரூ.10,725.88 கோடி அதிகரித்து ரூ.7,00,084.21 கோடியாகவும், ஐடிசியின் மதிப்பு ரூ.1,375.6 கோடி உயர்ந்து ரூ.6,43,907.42 கோடியாகவும் இருந்தது.
இதற்கிடையில், சில நிறுவனங்கள் சென்ற வாரத்தின் அதன் சந்தை மதிப்பீட்டை குறைத்துள்ளன. அவற்றில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் சந்தை மூலதனம் ரூ.85,730.59 கோடி சரிந்து ரூ.15,50,459.04 கோடியாக உள்ளது. அதேபோல், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.15,861.16 கோடி சரிந்து ரூ.7,91,438.39 கோடியாக உள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மதிப்பு ரூ.14,832.12 கோடி குறைந்து ரூ.6,39,172.64 கோடியாகவும், பாரத ஸ்டேட் வங்கியின் மதிப்பு ரூ.7,719.79 கோடி குறைந்து ரூ.6,97,815.41 கோடியாகவும் இருந்தது.
தொடர்ந்து இந்த வாரமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக நீடித்து வருகிறது. டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி மற்றும் எல்ஐசி ஆகிய நிறுவனங்கள் இந்த லிஸ்டில் அடுத்தடுத்து உள்ளன.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications