டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, பார்தி ஏர்டெல் இவங்க தான் இந்த வாரம் டாப்பர்ஸ்..!

இந்திய பங்கு சந்தைகள் கடந்த சில வாரங்களாகவே முதலீட்டாளர்களை குதூகலப்படுத்தும் விதமாக, தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. இதனால் சென்செக்ஸ் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையில் இந்த குறியீட்டில் உள்ள டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பினை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

10ல் நான்கு நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது 65,464.41 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தினை விட, இந்த வாரத்தில் சந்தை மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

கடந்த வாரத்தில் டாப் 10 நிறுவனங்களில் டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 65,464.41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த கால இடைவெளியில் சென்செக்ஸ் குறியீடு 710 புள்ளிகள் அதிகரித்து (அ) 1.21% அதிகரித்து 59,000 புள்ளிகளை கடந்துள்ளது.

சந்தை மதிப்பு வீழ்ச்சி

சந்தை மதிப்பு வீழ்ச்சி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 43,746.79 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மட்டும் 22,219.75 கோடி ரூபாய் அதிகரித்து, 15,15,380.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பார்தி ஏர்டெல் சந்தை மதிப்பு

பார்தி ஏர்டெல் சந்தை மதிப்பு

முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்த நிலையில், அதன் சந்தை மூலதனம், 22,984.14 கோடி ரூபாய் அதிகரித்து, 3,99,901.97 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் ஏர்டெல்லின் பங்கு விலையானது, 1.33% அதிகரித்து, 728.15 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.

எஸ்பிஐ (SBI)

எஸ்பிஐ (SBI)

நாட்டின் மிகப்பெரிய முன்னணி பொதுத்துறையை சேர்ந்த வங்கியான எஸ்பிஐ-யின் சந்தை மதிப்பானது, 19,500.28 கோடி ரூபாய் அதிகரித்து, 3,99,901.97 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் பங்கு விலையும் வெள்ளிக்கிழமையன்று முடிவில், 2.07% குறைந்து, 454.10 ரூபாயாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் வழக்கத்திற்கு மாறாக, 14,315.33 கோடி ரூபாய் அதிகரித்து, 14,16,903.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த வெள்ளிக்கிழமையன்று, 1.93% ரூபாய் குறைந்து, 3,827.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி மதிப்பு

ஹெச்.டி.எஃப்.சி வங்கி மதிப்பு

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை சேர்ந்த பெரும் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பானது, 8,664.66 கோடி ரூபாய் குறைந்து, 8,76,597.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலையும் வெள்ளிக்கிழமையன்று முடிவில், 1.42% அதிகரித்து, 1,582.15 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி மதிப்பு

ஹெச்.டி.எஃப்.சி மதிப்பு

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை சேர்ந்த நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மதிப்பானது, 576.19 கோடி ரூபாய் குறைந்து, 5,10,550.29 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி-ன் பங்கு விலையும் வெள்ளிக்கிழமையன்று முடிவில், 0.47% அதிகரித்து, 2,825.65 ரூபாயாக அதிகரித்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் மதிப்பு

பஜாஜ் பைனான்ஸ் மதிப்பு

தனியார் வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 90.54 கோடி ரூபாய் குறைந்து, 4,48,292.54 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 17.30 ரூபாய் அதிகரித்து, 7,428.80 ரூபாயாக உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது, 42.29 கோடி ரூபாய் குறைந்து, 4,99,176.68 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில், சற்று குறைந்து 720.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+