கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சற்று ஏற்றத்தினையே கண்டிருந்தது. இதற்கிடையில் டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது, 2,61,767.61 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்த லாபத்தில் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமே முதலிடத்தில் உள்ளது.
இதற்கிடையில் 30 நிறுவனங்களை கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 1914.49 புள்ளிகள் அல்லது 3.33% ஏற்றத்தினைக் கண்டுள்ளது.
டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 39,073.7 கோடி ரூபாய் அதிகரித்து, 17,95,709.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2,655.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி-யின் சந்தை மூலதனம் 41,469.24 கோடி ரூபாய் அதிகரித்து, 8,35,324.84 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 2.42% அதிகரித்து, 1506 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 29,687.09 கோடி ரூபாய் அதிகரித்து, 4,88,808.97 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலை 1.44% அதிகரித்து, 2078.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 27,103.16 கோடி ரூபாய் அதிகரித்து, 4,16,625.19 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.47% அதிகரித்து, 758.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி
இதே ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனம் 26,851.9 கோடி ரூபாய் அதிகரித்து, 4,44,363.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 2.59% அதிகரித்து, 2452.30 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 26,687.09 கோடி ரூபாய் அதிகரித்து, 4,48,810.74 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.04% அதிகரித்து, 7,408.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 25,975.05 கோடி ரூபாய் அதிகரித்து, 4,85,801.96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.81% அதிகரித்து, 736.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டிசிஎஸ்
இதே போல டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 18,088.37 கோடி ரூபாய் அதிகரித்து, 13,89,678.12 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 0.50% அதிகரித்து, 3758.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 10,916.49 கோடி ரூபாய் அதிகரித்து, 8,00,268.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.17% குறைந்து, 1903.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 15,930.43 கோடி ரூபாய் அதிகரித்து, 4,53,548.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.97% அதிகரித்து, 508.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications