நிதி அமைச்சரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். கடந்த ஆகஸ்ட் 23, 2019 அன்று ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என ஆட்டோமொபைல் தொடங்கி பல துறை சார் அறிவிப்புகளை வெளியிட்டார் நிதி அமைச்சர். அதே போல ஆகஸ்ட் 30, 2019 அன்று வங்கி இணைப்பு தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டார். கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 14, 2019 அன்று ரியல் எஸ்டேட் மற்றும் இந்திய ஏற்றுமதியை மேம்படுத்த அறிவிப்புகளை வெளியிட்டார் நிதி அமைச்சர். ஆனால் சந்தை இந்த அறிவிப்புகளை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
காரணம் இன்று மீண்டும் சந்தை இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த ஐந்து வர்த்தக நாட்களாக 37,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்தும், இன்று காலை வர்த்தக நேரத்திலேயே 37,000 புள்ளிகள் உடைபட்டு இறக்கத்தில் வர்த்தகமாகி வருவதும் கவனிக்க வேண்டி இருக்கிறது. நிர்மலா சீதாராமனின் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு முன் சென்செக்ஸ் 36,701 புள்ளிகள் நிறைவு அடைந்து இருந்தது. போகிற போக்கைப் பார்த்தால் சென்செக்ஸ் மீண்டும் இந்த 36,700 புள்ளிகளைத் தொட்டு விடுமோ என்கிற பயத்தையும் சந்தையில் பார்க்க முடிகிறது.

இன்று காலை சென்செக்ஸ் 37,169 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதாவது நேற்றைய குளோசிங் புள்ளியான 37,123 புள்ளிகளில் இருந்து 43 புள்ளிகள் ஏற்றம் கண்டு கேப் அப்பில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. இந்த 43 புள்ளிகள் ஏற்றத்தை ஒரு நல்ல சமிக்ஞையாகப் பார்த்த முதலீட்டாளர்களுக்கு அடுத்தடுத்து ஏமாற்றம் தான் மிஞ்சியது.
அதன் பிறகு காலை 11.05 மணிக்கு, 36,830 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது சென்செக்ஸ். இப்போது வரை, இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வரை சந்தை மேல் நோக்கி வர்த்தகம் ஆகுமா என்கிற சந்தேகம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. எனவே இன்றைய வர்த்தக நேர முடிவில், மேலும் கீழ் நோக்கி வர்த்தகமாகமானால் 36,700 முதல் சப்போர்ட்டாகவும், 36,400 இரண்டாவது சப்போர்ட்டாகவும் இருக்கும். ஒருவேளை ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் காணத் தொடங்கினால் 37,000 வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதையும் மீறி ஏற்றம் கண்டால் 37,410 வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.
சரி அதெல்லாம் ஒரு பக்கம் போகட்டும், இப்படி உள்நாட்டுப் பிரச்னைகள் எல்லாம் ஒரு பக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் பரபரத்துக் கொண்டு இருக்க, சவுதி அராம்கோ நிறுவன விபத்தால், கச்சா எண்ணெய் சப்ளையில் ஏற்பட்ட சிக்கல், இதனால் விலை ஏற இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சிக்கல்களால் சந்தையில் பதட்டம் அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications