சென்செக்ஸ் இண்டெக்ஸின் ஏற்ற டிரெண்ட் இன்னும் முடியவில்லை என நிரூபித்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக 40,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து வந்த சென்செக்ஸ், இன்று காலை கொஞ்சம் சுணங்கியது. ஆனால் மதிய நேரத்தில் நல்ல ஏற்றம் கண்டு மீண்டும் சென்செக்ஸ் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
நேற்று (13 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,625 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,623 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,880 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் 169 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,794 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (14 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.15 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.31 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.27 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (14 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கி, ஹாங் காங் நாட்டின் ஹேங் செங், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் இறக்கத்தில் வர்த்தகமாயின. தென் கொரியாவின் கோஸ்பி 0.94 % இறக்கத்தில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தை நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 13 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,852 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,225 பங்குகள் ஏற்றத்திலும், 1,459 பங்குகள் விலை இறக்கத்திலும், 168 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 102 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. என் டி பி சி, ஓ என் ஜி சி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், டெக் மஹிந்திரா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications