இன்று காலையில் இருந்தே நல்ல ஏற்றத்தில் வர்த்தகமான சென்செக்ஸ், அதிகபட்சமாக 36,014 புள்ளிகள் வரைத் தொட்டது. அதன் பின் 35,843 புள்ளிகளில், 429 புள்ளிகள் ஏற்றத்திலேயே வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸில் அதிக வெயிட்டேஜ் கொண்ட ஹெச் டி எஃப் சி, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், டி சி எஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றம் கண்டதால், சென்செக்ஸும் நல்ல ஏற்றம் கண்டு இருக்கிறது.
அது போக, சென்செக்ஸின் 30 பங்குகளில் 22 பங்குகள் விலை ஏற்றத்திலும், 8 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.
இன்று வர்த்தகத்தில் ஹீரோ மோட்டோ கார்ப், சிப்லா, ஹெச் சி எல் டெக், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகளில் அதிகம் வர்த்தகம் நடந்து இருக்கின்றன.
நிஃப்டி 50 பங்குகளில் பிரிட்டானியா தன் 52 வார உச்ச விலையான 3,708 ரூபாய்க்கு நெருக்கமாக 3,540 ரூபாயில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சமீபத்தில் தான் பிரிட்டானியா தன் 3,708 என்கிற வரலாற்று உச்ச விலையைத் தொட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே நாளை வர்த்தகம் தொடங்கும் போது இந்த பங்கில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் ஒரு கண் வைத்துக் கொள்ளவும்.
இந்தியாவின் டாப் 150 பங்குகளில் டாடா பவர், மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸ், என் பி சி சி, ஃபைசர், ஃப்யூச்சர் ரீடெயில், ஐ டி பி ஐ போன்ற பங்குகள் சுமாராக 4.9 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்து இருக்கிறது.
அதே டாப் 150 பங்குகளில் ஃப்யூச்சர் கன்ஸ்யூமர், சுந்தரம் ஃபைனான்ஸ், பி என் பி ஹவுசிங், இமாமி போன்ற பங்குகள் 1.5 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்து இருக்கின்றன.
கடந்த 6 நாட்களாக சரிவைக் கண்ட அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் இன்று திடீரென அப்பர் சர்க்யூட் தொட்டு 357.95 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இந்த டாப் 150 பங்குகளில் ஐ டி பி ஐ பங்கு தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ஜூபிலண்ட் பங்கு விலையும் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு இருக்கிறது.
டாப் 150 பங்குகளில் இன்று டாடா பவர், ஃப்யூச்சர் ரீடெயில், ஐடிபிஐ, டிஷ் டிவி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ரிலையன்ஸ் பவர் போன்ற பங்குகள் அப்பர் சர்க்யூட்டைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications