ஒவ்வொரு வாரமும், அதிக மதிப்புள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பின் ஏற்ற, இறக்கங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்ற வாரத்திலிருந்து இந்த வாரம் வரையான டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ஆனது 9 நிறுவனங்களின் எம்-கேப் ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதில் ஏர்டெல் நிறுவனத்தில் சந்தை மூலதனம் இந்த வாரத்திற்கான டாப் ஏற்றம் கண்டுள்ளது.
சென்ற வாரத்தில், பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கமான போக்குகள் முதலீட்டாளர்களின் உணர்வுகளுக்கு மத்தியில், பார்தி ஏர்டெல் சந்தை மூலதனத்தில் முதன்மை வகித்து வருகிறது. அதேபோக்கில், டாப்-10 மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள் கடந்த வார சந்தை மதிப்பீட்டில் ரூ.2,01,552.69 கோடியைச் சேர்த்துள்ளன. கடந்த வாரம், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,707.01 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த வியாழக்கிழமை அதன் வாழ்நாள் அதிகபட்சமான 83,116.19 ஐ எட்டியது.

இதற்கிடையில், இன்ஃபோசிஸின் சந்தை மூலதனம் ரூ.17,480.49 கோடி உயர்ந்து ரூ.8,07,299.55 கோடியாகவும், ஐடிசியின் மதிப்பு ரூ.15,194.17 கோடி அதிகரித்து ரூ.6,42,531.82 கோடியாகவும் இருந்தது. பார்தி ஏர்டெல்லின் மதிப்பு ரூ.54,282.62 கோடி உயர்ந்து ரூ.9,30,490.20 கோடியாக உயர்ந்து. டாப்-10 நிறுவனங்களில் அதிக லாபம் ஈட்டியுள்ளது. அதேபோல், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.29,662.44 கோடி அதிகரித்து ரூ.8,80,867.09 கோடியாக உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ரூ.23,427.12 கோடி அதிகரித்து அதன் மதிப்பு ரூ.16,36,189.63 கோடியாக உள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவரின் எம்கேப் ரூ.22,438.6 கோடி உயர்ந்து ரூ.6,89,358.33 கோடியாகவும், எச்டிஎஃப்சி வங்கியின் மதிப்பு ரூ.22,093.99 கோடியாக உயர்ந்து ரூ.12,70,035.77 கோடியாகவும் இருந்தது. இன்ஃபோசிஸின் சந்தை மதிப்பு ரூ.17,480.49 கோடி உயர்ந்து ரூ.8,07,299.55 கோடியாகவும், ஐடிசியின் மதிப்பு ரூ.15,194.17 கோடி அதிகரித்து ரூ.6,42,531.82 கோடியாகவும் இருந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.9,878.19 கோடி உயர்ந்து ரூ.19,92,160.61 கோடியாகவும், பாரத ஸ்டேட் வங்கியின் மதிப்பு ரூ.7,095.07 கோடி உயர்ந்து ரூ.7,05,535.20 கோடியாகவும் உள்ளது. இதற்கிடையில், 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் சந்தை மூலதனத்தை பெருக்கிக்கொண்ட நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) சந்தை மூலதனம் ஆனது மட்டும் ரூ.3,004.38 கோடி குறைந்து ரூ.6,54,004.76 கோடியாக இருந்தது.
டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், எல்ஐசி மற்றும் ஐடிசி ஆகியவற்றைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டாப்-10 மதிப்புமிக்க நிறுவனங்களின் தரவரிசையில் தொடர்ந்து இந்த வாரமும் முன்னணியில் இருந்து வருகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications