இந்திய பங்கு சந்தையானது கடந்த சில வாரங்களாகவே பெரியளவிலான ஏற்ற இறக்கம் என்பது இருந்து வருகின்றது. குறிப்பாக அன்னிய செலாவணி கையிருப்பு குறித்தான தரவானது மார்ச் 24 அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 3, 2023 உடன் முடிவடைந்த காலக்கட்டத்தில் 562.4 பில்லியன் டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் 560.94 பில்லியன் டாலராக இருந்தது. இதற்கிடையில் மார்ச் 24 அன்று இது வெளியாகவுள்ளது.
டெபாசிட் & கடன் வளர்ச்சி
வரும் வாரத்தில் வங்கி டெபாசிட் வளர்ச்சி, கடன் வளர்ச்சி என பல தரவுகள் வெளியாகவுள்ளது. பிப்ரவரி 24வுடன் முடிவடைந்த 15 நாட்களில் கடன் வளர்ச்சி என்பது 15.5% ஆகவும், இதே டெபாசிட் வளர்ச்சி கடந்த ஆண்டினை காட்டிலும் 10.1% ஆகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இது மேற்கொண்டு வரும் வாரத்தில் எப்படி இருக்க போகிறது. இது சந்தையில் எப்படி தாக்கத்தினை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சந்தையில் தாக்கம் இருக்கலாம்
கோடக் செக்யூரிஸின் ஈக்விட்டி ஆராய்ச்சி தலைவர் ஸ்ரீ காந்த் செளஹான் கூறுகையில், சமீபத்திய வங்கி நெருக்கடிக்கு மத்தியில் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலையானது சரிவினைக் கண்டது. அமெரிக்க பத்திர வருவாயும் சரிவினைக் கண்டுள்ளது. ஐரோப்பிய வங்கியும் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் மத்திய வங்கியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அமெரிக்க சந்தை தரவு
அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டம் மார்ச் 21 - 22ல் நடைபெறவுள்ள நிலையில், 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே 450 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார தரவுகளான வீடு விற்பனை, வேலையின்மை நலன், நீடித்த பொருட்களுக்கான ஆர்டர், பிஎம்ஐ தரவு என பலவும் வெளியாகவுள்ளது.
முதலீடுகள் வெளியேற்றம்
அன்னிய போர்ட்போலியோ முதலீடு, மார்ச் 18 அன்று 11,344 கோடி ரூபாயாக இருந்தது. இதில் அதானி குழுமத்தில் செய்யப்பட்ட GQG பார்ட்னர்ஸின் முதலீடான 15,446 கோடி ரூபாயும் சேரும். ஆக நிகராக பார்க்கும்போது இது மைனஸில் தான் உள்ளது. 2023ல் இதுவரையில் 23,283 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளன.
வரும் வாரத்தில் தாக்கம்
எப்படியிருப்பினும் முதலீட்டாளர்கள் விரும்பி கடந்த வாரம் கேபிட்டல் குட்ஸ், நிதிச் சேவைகள் சார்ந்த பங்குகளை வாங்கியுள்ளனர். எப்படியிருப்பினும் வரும் வாரங்களில் சந்தையானது அழுத்தம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறகிறது. குறிப்பாக வங்கி நிதி நெருக்கடி, அன்னிய முதலீடு என பலவும் சந்தையில் வரும் நாட்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
முக்கிய லெவல்
வரும் வாரத்தில் டெக்னிக்கலாக பார்க்கும்போது டோஜி பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், வரும் வாரத்தில் தினசரி கேண்டில் பேட்டர்னில் புல்லிஷ் ரிவர்ஷல் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. அக சந்தையானது மேலே ஏற்றம் காணலாம். குறிப்பாக முக்கிய ரெசிஸ்டன்ட் லெவல் அக 17,250 அகவும், இதனை உடைத்தால் 17,500 மற்றும் 17,600 என்ற லெவலையும் உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே கீழாக முக்கிய சப்போர்ட் லெவலாக 16,950 ஆகவும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications