இந்திய சாலைகளின் கிங் என்று வர்ணிக்கப்படும் மாருதி சுசூகிக்கு தற்போது காலம் அவ்வளவு சாதகமாக இல்லை. பங்குச் சந்தையில் ஒரு காலத்தில் சீறிப்பாய்ந்த இந்த ஜாம்பவான், இப்போது பிரேக் பிடிக்க முடியாமல் சரிந்து கொண்டிருப்பது முதலீட்டாளர்களை அதிர வைத்துள்ளது.
இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் தனது சந்தை மதிப்பில் சுமார் 1.32 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையே ஒரு பக்கம் சவால்களை சந்தித்து வந்தாலும், மாருதி சுசூகியின் பங்குகள் மட்டும் நடப்பு ஆண்டில் இதுவரையில் 25% வரை சரிந்து, சக நிறுவனங்களை விட மோசமான நிலையில் இருப்பது தான் இப்போதைய ஹாட் டாபிக்.

இது வெறும் ஒரு சின்ன சறுக்கல்தானா அல்லது பெரிய சரிவின் ஆரம்பமா - வாகன துறை நிபுணர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரை அனைவர் மனதிலும் ஓடும் இந்த மில்லியன் டாலர் கேள்விக்கான பதில் தான் என்ன? உண்மையில் இப்பங்கில் என்னதான் நடக்கிறது? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் சில வர்த்தக தினங்களில் உச்சத்தை தொட்டு வந்த வாகன பங்கானது, அதன் பிறகு அப்படியே தலைகீழாக சரியத் தொடங்கியுள்ளது. அதன் உச்ச விலையில் இருந்து 25% சரிந்துள்ள இப்பங்கு, முதலீட்டாளர்களின் 1.32 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை காலி செய்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பங்கானது அதன் உச்ச விலையான 17,372 ரூபாயில் இருந்து, 12,500 ரூபாய் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 4 சக்கர வாகன நிறுவனங்களிலேயே மாருதி போன்று எந்த நிறுவனமும் சரியவில்லை என்ற மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளது. மாருதியை தொடர்ந்து மஹிந்திரா & மஹிந்திரா பங்கானது 19% சரிவையும், ஹீண்டாய் மோட்டார் 16% சரிவையும், டாடா மோட்டார்ஸ் பங்கானது 15% சரிவையும் கண்டுள்ளது.
ஜெஃப்ரீஸ் அறிக்கையின் படி, மாருதி சுசூக்கி பங்குகள் குறித்த ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது மாருதி பங்கை ஹோல்டு செய்ய பரிந்துரைத்தாலும், சில கசப்பான உண்மைகளையும் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தியாவில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை சீராக இருந்தாலும், இழந்த தனது உள்நாட்டுச் சந்தையை மாருதியால் மீண்டும் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான், மேற்கொண்டு மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் கடும் போட்டி காரணமாக, நிறுவனத்தின் லாப வரம்பு எதிர்பார்த்த அளவு உயருமா என்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த சூழலில் தான் 2026 முதல் 2028 வரையிலான நிதியாண்டுகளுக்கான ஒரு பங்கு வருவாய் (EPS) மதிப்பீட்டை 3% - 5% வரை குறைந்துள்ளது. அதோடு இலக்கு விலையையும் 17,500 ரூபாய் என்பதில் இருந்து, 16,000 ரூபாயாக குறைத்துள்ளது.
நோமுரா தரகு நிறுவனமும் இதேபோன்று தான் கணித்துள்ளது. இது நியூட்ரல் என ரேட்டிங் கொடுத்துள்ளதோடு, இலக்கு விலையையும் 16,118 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் பாதிக்கும் மேல் தன் பக்கம், சந்தை பங்கை கைவசம் வைத்திருந்த மாருதி, நடப்பு ஆண்டில் 40%-ஐ கூட தாண்ட முடியவில்லை. மாருதியின் பலமே நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் சிறிய ரக கார்கள் தான். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மினி செக்மென்ட் பிரிவில் கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் எந்த முன்னேற்றமும் இன்றி 10,238 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதே காம்பாக்ட் செக்மென்ட் பிரிவில் சுமார் 8.99% சரிந்து, வெறும் 66,386 யூனிட்களாக குறைந்துள்ளது. இருப்பினும் மோதிலால் ஓஸ்வால் மற்றும் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் மாருதியின் எதிர்காலம் குறித்து மிகவும் பாசிட்டிவாக உள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications