பங்குச் சந்தையில் லார்ஜ்கேப் வகையை சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான மசாகன் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் (Mazgaon Dock Shipbuilders Ltd) அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, டிவிடெண்ட் மற்றும் பங்குப் பிரிப்புக்கு ஒப்புதல் அளிக்க அக்டோபர் 22 அன்று கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 22ஆம் வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், செப்டம்பரில் முடிவடைந்த நிதியாண்டிற்கான இடைக்கால டிவிடெண்ட்டை ஆய்வு செய்து, வரலாற்றில் முதல் பங்கு பிரிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பரிவர்த்தனை தாக்கல் படி, SEBI விதிமுறைகள் 2015 இன் விதிமுறை 29 இன் படி, அக்டோபர் 22, 2024 அன்று நடைபெறும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் பங்குப் பிரிப்பு முன்மொழிவை பரிசீலித்து அங்கீகரிக்கும் மற்றும் நிதியாண்டிற்கான இடைக்கால டிவிடெண்டை அங்கீகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் அதன் முதலீட்டாளர்களுக்கு சுமார் 120 சதவீத லாபத்தை அளித்ததன் மூலம் மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. அதேபோல், கடந்த வர்த்தகத்தில் 7.3 சதவீதம் அதிகரித்து ரூ. 4549 இல் முடிந்தது. 52 வாரங்களில் அதிகபட்ச விலை ரூ.5860 ஆகவும், அதே போல் 52 வாரங்களில் இல்லாத அளவாக ரூ.1742 ஆகவும் உள்ளது.
இதேபோல் இந்தப் பங்கு கடந்த 6 மாதங்களில் சுமார் 110 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 1 வருடத்தில் இந்தப் பங்கு சுமார் 120 சதவிகித லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2607 சதவிகிதம் அதன் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 91,340 கோடி ஆகும்.
மும்பையில் அமைந்துள்ள இந்த நிறுவனம் ISO 9001:2015 தரச்சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் சிறந்த கப்பல் கட்டும் தளமாகும். 1960 முதல், பொதுத் துறை நிறுவனமாக உள்ள இந்த நிறுவனம் மொத்தம் 802 கப்பல்களை உருவாக்கியுள்ளது. நிறுவனம் இந்திய கடற்படை மற்றும் கடல் தளங்களுக்கு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை உற்பத்தி செய்கிறது. கடலோர எண்ணெய் தோண்டுவதற்கான துணைக் கப்பல்களையும் உற்பத்தி செய்கிறது. இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு 28 போர்க்கப்பல்கள் அடங்கும். அதிநவீன கப்பல்கள் முதல் ஏவுகணை படகுகள் மற்றும் 7 நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் 1934 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, இந்த நிறுவனம் தனது செயல்பாடுகளை மும்பையில் நடத்தி வருகிறது. ஜூன் 2024 நிலவரப்படி, இந்த நிறுவனத்தில் 2814 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications