ஃபஷ்னியர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மீஷோ என்ற பெயரில் ஆன்லைன வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் கொடி கட்டி பறந்த காலத்தில், லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த நிறுவனம்தான் மீஷோ.
2015ம் ஆண்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் மீஷோ களம் கண்டது. என்னதான் பிளிப்கார்ட் மற்றும் அமேசானும் இந்திய வாடிக்கையாளர்களை போட்டி போட்டு பிடித்தாலும், மீஷோ தனது தனித்துவமான அணுகுமுறையால், குறிப்பாக தங்களது தளத்தில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைத்தது, இதன் விளைவாக தொடங்கிய சில ஆண்டுகளிலேயே வாடிக்கையாளர்களிடம் முக்கியத்துவம் பெற்று விட்டது.

டயர் 3 மற்றும் மதிப்பு உணர்வுள்ள பயனர்களை மீது கவனம் செலுத்துவதன் மூலம் மீஷோ தனது சந்தை பங்கை வளர்த்துள்ளது. மீஷோ நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளது. இதற்கான நிதியை திரட்டுவதற்காக புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐபிஓவை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளை மீஷோ தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், ஐபிஓ வாயிலாக சுமார் 8,700 கோடி (100 கோடி டாலர்) திரட்ட திட்டமிட்டுள்ளது. மீஷோ ஏற்கனவே மோர்கன் ஸ்டான்லி, கோடக் மகிந்திரா கேபிட்டல் மற்றும் சிட்டி ஆகிய நிறுவனங்களை தனது ஐபிஓவிற்கு ஆலோசகர்களாக தேர்ந்தெடுத்துள்ளது.
மீஷோ வரும் வாரங்களில் ஐபிஓவுக்கான தனது வரைவு ஆவணங்களை தாக்கல் செய்ய இலக்கு வைத்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி செப்டம்பர்-அக்டோபர் காலகட்டத்தில் மீஷோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அதேசமயம், மீஷோ தனது ஐபிஓ திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பு, அதன் தலைமையகத்தை அமெரிக்காவின் டெலாவேரிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற வேண்டும். தற்போது இந்த செயல்முறை மேம்பட்ட நிலைகளில் உள்ளதாக தகவல். மீஷோவின் ரிவர்ஸ் இணைப்புக்கு சுமார் 30 கோடி டாலர் வரியாக செலுத்த வேண்டியது இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மீஷோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டால், அது இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஃபிளிப்கார்ட்டை முந்திவிடும். 2007ல் தொடங்கப்பட்ட ஃபிளிப்கார்ட் நீண்ட காலமாக ஐபிஓவுக்கு தயாராகி வருகிறது. ஆனால் அதன் தாய் நிறுவனமும் அமெரிக்காவின் சில்லரை விற்பனை நிறுவனமான வால்மார்ட் அதன் ஐபிஓவிற்கான காலக்கெடுவை முடிவு செய்யும் வரை காத்திருக்கிறது.
2022 நிதியாண்டில் மீஷோ நிறுவனத்தின் வருவாய் ரூ.3,240 கோடியாக இருந்தது. 2023 நிதியாண்டில் இது ரூ.5,735 கோடியாக உயர்ந்தது. 2024ம் நிதியாண்டில் மீஷோவின் வருவாய் புதிய உச்சமான ரூ.7,615 கோடியை எட்டியது. 2022ம் நிதியாண்டில் மீஷோவுக்கு ரூ.3,248 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது. ஆனால் 2024 நிதியாண்டில் நஷ்டம் ரூ.305 கோடியாக குறைந்தது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications