இந்தியா-பாகிஸ்தான் பதற்றம், முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்த போன்ற காரணங்களால் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் தாக்கம் இந்த வாரமும் பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்துக்கு வாங்க அல்லது விற்க நல்ல ஆதாயம் தர வாய்ப்புள்ள ரூ.200க்கும் குறைவான 3 பங்குகளை ஆனந்த் ரதியின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவு துணை தலைவர் மெஹூல் கோத்தாரி பரிந்துரை செய்துள்ளார். சிஇஎஸ்இ, கெயில் இந்தியா மற்றும் பந்தன் வங்கி ஆகிய 3 பங்குகள் நாளைய இன்ட்ராடே வர்த்தகத்துக்கு நல்ல லாபம் அளிக்க வாய்ப்புள்ள பங்குகள் என்று கோத்தாரி தெரிவித்தார். மேலும் அந்த பங்குகளின் வாங்கும் விலை, விற்பனை விலை மற்றும் ஸ்டாப்லாஸ் ஆகியவற்றையும் தெரிவித்துள்ளார்.

சிஇஎஸ்இ: சிஇஎஸ்இ நிறுவனம் மின்சார விநியோக உள்ளிட்ட வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் சிஇஎஸ்இ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.90 சதவீதம் குறைந்து ரூ.153.90ஆக இருந்தது. இப்பங்கினை ரூ.152 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.162ஆக கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.144 என மதிப்பிடப்பட்டுள்ளது.
பந்தன் வங்கி: நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று பந்தன் வங்கி. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் பந்தன் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.22 சதவீதம் குறைந்து ரூ.165.25ஆக இருந்தது. இந்த பங்கின் விலை ரூ.167.50 என்ற உயரும் போது விற்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.157ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.178 ஆகும்.
கெயில் இந்தியா: அரசுக்கு சொந்தமான நாட்டின் ஒருங்கிணைந்த இயற்கை எரிவாயு நிறுவனம் கெயில் இந்தியா. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் கெயில் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.36 சதவீதம் குறைந்து ரூ.186.75ஆக இருந்தது. இப்பங்கினை ரூ.185 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.196ஆக கணிக்கப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.178ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications