கடந்த ஆறு மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளன. முக்கிய குறியீடுகள் மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், சில பங்குகள் அந்நிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து, குறிப்பிடத்தக்க வருமானத்தை அளித்துள்ளன. குறிப்பாக, Nifty 5% மற்றும் Sensex 4% மட்டுமே உயர்ந்த நிலையில், பரந்த BSE 500 குறியீடு 7% வளர்ச்சி கண்டது. இந்த காலகட்டத்தில் பல பங்குகள் மல்டிபேக்கர்களாக மாறி முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்றுள்ளன.
பவர் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைகளுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் BGR எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை ஆறு மாதங்களில் ரூ.101.88 இலிருந்து ரூ406 ஆக உயர்ந்து, 298% லாபத்தைப் பதிவு செய்துள்ளது.ஜூன் காலாண்டில் 0.01% ஆக இருந்த அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPIs) பங்களிப்பு, செப்டம்பர் காலாண்டில் 0.10% ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை அன்று இதன் பங்கு ரூ.406 இல் 0.83% உயர்வுடன் முடிவடைந்தது.

பருத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சோமா டெக்ஸ்டைல்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஆறு மாதங்களில் ரூ.43.08 இலிருந்து ரூ.148.15 ஆக உயர்ந்து 243% வளர்ச்சி கண்டது. ஜூன் காலாண்டில் முதலீடு செய்யாத அந்நிய முதலீட்டாளர்கள், செப்டம்பர் காலாண்டில் 0.05% பங்குகளை வாங்கினர். இருப்பினும், வெள்ளிக்கிழமை அன்று அதன் பங்கு 4.97% சரிந்து ரூ.148.15 இல் நிறைவடைந்தது.
பொறியியல் பிரிவில், பேட்டரிகள் மற்றும் பாதுகாப்பு மின்னணுவியல் கருவிகளை உற்பத்தி செய்யும் HBL பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட், ஆறு மாதங்களில் ரூ.468.85 இலிருந்து ரூ.976.80 ஆக உயர்ந்து 108% வருமானத்தை அளித்தது. முதலாம் காலாண்டில் 4.83% ஆக இருந்த FPI முதலீடு இரண்டாம் காலாண்டில் 7.10% ஆக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை அன்று இதன் பங்கு ரூ.976.80 இல் 1.20% உயர்வுடன் முடிவடைந்தது.
குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (GMDC) பங்கு மதிப்பு ஆறு மாதங்களில் ரூ.301.65 இலிருந்து ரூ.600.20 ஆக உயர்ந்து, 98.97% லாபத்தை ஈட்டியது. FPI முதலீடும் ஜூன் காலாண்டில் 2.25% இலிருந்து செப்டம்பர் காலாண்டில் 3.32% ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், இதன் பங்கு 5.98% உயர்வுடன் ரூ.600.20 இல் நிறைவடைந்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications