பங்குச்சந்தையில் மாஸ் காட்டிய ஈரோட்டுக்காரர்.. ஆரம்பமே அதிரடி.. 30% உயர்வில் Milky Mist..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மில்கி மிஸ்ட் (Milky Mist) வெற்றிகரமாக ஐபிஓ வெளியிட்டு இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு உள்ளது. ஆரம்பமே அதிரடி என்ற வகையில் ஐபிஓ விலையை காட்டிலும் சுமார் 18 சதவீதம் அதிக விலைக்கு பட்டியலிடப்பட்டு அசத்தியுள்ளது மில்கி மிஸ்ட் நிறுவனம்.

16 வயதான சதீஷ் குமாரின் விடாமுயற்சியில் உருவான இந்த மில்கி மிஸ்ட் தற்போது இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. சுமார் 1553 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டும் திட்டத்துடன் பங்குச்சந்தைக்கு வந்த சதீஷ் குமாரின் மில்கி மிஸ்ட் நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

பங்குச்சந்தையில் மாஸ் காட்டிய ஈரோட்டுக்காரர்.. ஆரம்பமே அதிரடி.. 30% உயர்வில் Milky Mist..!

இதன் விளைவாக 140 ரூபாய் விலையில் ஐபிஓவுக்கு வந்த மில்கி மிஸ்ட் பங்குகள் இன்று சந்தையில் பட்டியலிடும் போது 18 சதவீதம் ப்ரீமியம் விலையில் சுமார் 165 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. தற்போது 181 ரூபாய்க்கு வர்த்தகமாகும் காரணத்தால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10000 கோடி ரூபாயில் இருந்து 11,990 கோடி ரூபாயாக உயர்ந்து அசத்தியுள்ளது.

இதைவிட முக்கியமான மில்கி மிஸ்ட் நிறுவனத்திற்கு நீண்ட கால முதலீட்டாளர்களை தக்க வைக்கும் வகையில் DAM கேப்பிட்டல் நிறுவனம் Buy rating கொடுத்து டார்கெட் விலையாக 175 ரூபாயை அறிவித்துள்ளது. இது ஐபிஓ விலையை காட்டிலும் 25 சதவீதம் அதிகம், ஆனால் தற்போது 30 சதவீதம் வரையில் உயர்ந்து 181.45 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டு தொடர்ந்து 181 ரூபாய் அளவிலேயே வர்த்தகமாகி வருகிறது.

இதைவிட முக்கியமாக தற்போது சந்தையில் சுமார் 25 லட்சம் பங்குகளுக்கான டிமாண்ட் இருக்கும் வேளையில் ஒருவர் கூட விற்க தயாராக இல்லை.

பெரும்பாலான டெய்ரி நிறுவனங்கள் பால், தயிரை முக்கிய விற்பனை பொருளாக வைத்திருக்கும், ஆனால் மில்கி மிஸ்ட் சீஸ், பன்னீர், வெண்ணெய், நெய், யோகர்ட், ஐஸ்கிரீம் போன்ற 20க்கும் அதிகமான பொருளை முக்கிய விற்பனை பொருளாக வைத்துக்கொண்டு தனது வர்த்தக வாய்ப்பை பல்வகைப்படுத்தியுள்ளது.

மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் ஐபிஓ-வுக்கு முன்பு சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனமான Temasek-ன் கிளை நிறுவனமான Jongsong Investments சுமார் 5.2 சதவீத பங்குகளை 139.76 ரூபாய் விலையில் வாங்கியது, ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்தது.

இதன் வாயிலாக ஐபிஓவில் oversubscribe ஆகி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2014ஆம் ஆண்டில் ஈரோட்டில் துவங்கிய இந்த மில்கி மிஸ்ட் 12 வருடத்தில் 12000 கோடி ரூபாய் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+