2 மாதங்களில் 113% லாபம் தந்த நம்ம ஈரோடு நிறுவனம்: இப்போது முதலீடு செய்யலாமா?

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உதயமாகி இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பால் பொருட்கள் நிறுவனமாக மில்கி மிஸ்ட் திகழ்கிறது. இந்நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது முதல் தற்போது வரை 113% வளர்ச்சியை கண்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் பங்குகள் 5% உயர்ந்து 298.75 ரூபாய் என அப்பர் சர்க்கியுட் நிலையை எட்டியது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் பங்குகள் தனது ஐபிஓ விலையை விட வெறும் இரண்டு மாதங்களில் 113% லாபத்தை எட்டியுள்ளன. இந்த சூழலில், முன்னணி தரகு நிறுவனமான நுவாமா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் மில்கி மிஸ்ட் பங்குகளை வாங்கலாம் என பரிந்துரைத்து, இலக்கு விலையை 330 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.

2 மாதங்களில் 113% லாபம் தந்த நம்ம ஈரோடு நிறுவனம்: இப்போது முதலீடு செய்யலாமா?

நிறுவனத்தின் வலுவான வளர்ச்சி, மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் விற்பனை அதிகரிப்பது, மூலதன செலவு கட்டத்திலிருந்து விடுபட்டு லாபத்தை நோக்கி நகரும் தன்மை ஆகியவை இந்த பாசிடிவான மதிப்பீட்டிற்கான காரணங்களாக கூறப்படுகிறது. 2029ஆம் நிதியாண்டு வரையிலான காலத்தில் நிறுவன வருவாய் 27% கூட்டு வளர்ச்சி விகிதத்தை எட்டும் என தெரிவித்துளது.

Also Read

பன்னீர், சீஸ், தயிர் மற்றும் ஐஸ்கிரீம், யோகர்ட் பிரிவுகளின் விரிவாக்கம் மற்றும் தென்னிந்தியாவை தாண்டிய சந்தை விரிவாக்கம் ஆகியவை நிறுவன வளர்ச்சிக்கு வித்திடும் என குறிப்பிட்டுள்ளது. மில்கி மிஸ்ட் இந்தியாவில் முழுமையாக மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களில் கவனம் செலுத்தும் நிறுவனம் ஆகும். இதில் பால் விற்பனை கிடையாது, முற்றிலும் 20-க்கும் மேற்பட்ட வகைகளில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்கப்படுகின்றன.

பன்னீர் விற்பனையில் 19% பங்குடன் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பிராண்டாக மில்கி மிஸ்ட் உள்ளது. தென்னிந்திய சீஸ் சந்தையில் சுமார் 12% பங்கை கொண்டுள்ளது. பன்னீர், சீஸ் மற்றும் தயிர் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 60% பங்களிப்பை கொண்டுள்ளன.

Recommended For You

மில்கி மிஸ்ட் நிறுவனத்திற்கு சில சவால்களையும் நுவாமா சுட்டிக்காட்டியுள்ளது. பால் கொள்முதல் விலையில் ஏற்படும் மாற்றங்கள், பெரும்பாலும் தமிழ்நாட்டை சார்ந்திருப்பது, ஒற்றை ஆலையை சார்ந்திருப்பது ஆகியவை செயல்பாட்டு ரீதியான ஒரு முக்கிய சவால்களாக இருக்கும் என கூறியுள்ளது.

மில்கி மிஸ்ட் சுமார் 21,000 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட நிறுவனம். கடந்த நிதியாண்டில் 3,145 கோடி ரூபாய் வருமானமும் 127 கோடி ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது. இதில் சுமார் 79% பங்குகள் பிரமோட்டர்களிடமே உள்ளன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+