இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதல் இடத்தை பிடித்த கையோடு, திங்கட்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கௌதம் அதானியின் அதானி குழுமத்தின் மதிப்பு 1.4 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி மற்றும் NDA கூட்டணி பெரும் வெற்றியை அடையும் என்று எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2000 புள்ளிகளுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ப்ளூசிப் பங்குகள் மீது முதலீடு செய்யும் காரணத்தால் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் பங்குகள், தேர்தல் கருத்துக்கணிப்புகளின் எதிரொலியாக அதிகபட்சமாக 16% வரை உயர்ந்தன.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு (market capitalisation) ஒரே நாளில் சுமார் ரூ.1.4 லட்சம் கோடி அதிகரித்தது. இதன் மூலம், பட்டியலிடப்பட்ட அதானி நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.19.24 லட்சம் கோடியாக உயர்ந்தது.
கடந்த 6 மாதங்களில் கிட்டத்தட்ட டபுள் மடங்காக உயர்ந்த அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக இன்று 16% உயர்ந்து, பங்குச்சந்தையில் 52 வார உச்சமான ரூ.875 ஐ எட்டியது. நிஃப்டி 50 பட்டியலில், அதானி போர்ட்ஸ் நிறுவனம் 9% உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. அதைத் தொடர்ந்து இக்குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் 7% உயர்ந்துள்ளது.
அதானி டோட்டல் கேஸ், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் அதானி கிரீன் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் 7-8% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்திற்கு மேல் லாபத்தைக் கொடுத்துள்ளது.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட சரிவுகளில் இருந்து மீண்டு வரும் வகையில், அதானி குழுமத்தின் சில நிறுவனங்களின் பங்குகள் ஏற்கனவே இழப்புகளை ஈடுகட்டி வருகின்றன.
இதற்கிடையில் ஜெப்ரீஸ் நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் (டார்கெட் விலை ரூ.3,800), அதானி போர்ட்ஸ் (டார்கெட் விலை ரூ.1,640) மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் (டார்கெட் விலை ரூ.1,365) ஆகியவற்றிற்கு BUY என தர அறிவிப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.
கடந்த வாரம், CLSA நிறுவனம் தனது "மோடி பங்குகள்" பட்டியலில் அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ், ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகியவற்றை இணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மோடி 3வது முறையாக ஆட்சியை பிடித்தால் Modi Stocks என அறிவிக்கப்பட்டு உள்ள பங்குகள் பெரிய அளவில் உயரும் என்பது முன் கூட்டியே கணிக்கப்பட்ட நிலையில் இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் உண்மையாகியுள்ளது.
இந்த பட்டியலில் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மற்றும் பிரதமர் மோடி அரசின் கொள்கைகளால் நேரடிப் பயனடைபவர்களாகக் கருதப்படும் பிற பெருநிறுவனங்களின் பங்குகளும் இடம்பெற்றுள்ளன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications