மார்கன் ஸ்டான்லி முதலீடு செய்த ஃபின்டெக் நிறுவனம்.. 2 நாளில் 30% உயர்ந்த பங்கு விலை..!

மும்பை: அமெரிக்காவின் புகழ்பெற்ற முதலீட்டு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley ) இந்தியாவை சேர்ந்த நிதி நிறுவனமான நியோஜின் ஃபின்டெக் (Niyogin Fintech) என்ற நிறுவனத்தின் 6.7 லட்சம் பங்குகளை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

மொத்தமாக 3.74 கோடி ரூபாய் செலுத்தி மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்த பங்குகளை கையகப்படுத்தி உள்ளது. திங்கள் கிழமை அன்று இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 54.14 ரூபாய் என வர்த்தகமான நிலையில் அதைவிட 2.8 சதவீதம் அதிக விலை கொடுத்த அதாவது ஒரு பங்கு 55.65 ரூபாய் என்ற விலைக்கு மார்கன் ஸ்டான்லி நிறுவனம் வாங்கி இருக்கிறது. Think India Opportunities Master Fund LP என்ற நிதியம் இதில் கணிசமான பங்குகளை வைத்திருந்தது.

மார்கன் ஸ்டான்லி முதலீடு செய்த ஃபின்டெக் நிறுவனம்.. 2 நாளில் 30% உயர்ந்த பங்கு விலை..!

நியோஜின் நிறுவனத்தில் Think India Opportunities Master Fund LP நிதியம், 9.17 சதவீத பங்குகளை சொந்தமாக வைத்திருந்தது. மொத்தம் 87.24 லட்சம் பங்குகள் இந்த நிதியத்திற்கு சொந்தமாக இருந்த நிலையில் அதில் 6.7 லட்சம் பங்குகளை மார்கன் ஸ்டான்லிக்கு இது விற்பனை செய்துள்ளது. இந்த தகவல் வெளியானதை அடுத்து நியோஜின் ஃபின் டெக் நிறுவன பங்கின் மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று 15 சதவீதமும் புதன்கிழமை அன்று 16 சதவீதமும் உயர்ந்தது. ஒரு பங்கின் மதிப்பு 72 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.

நியோஜின் ஃபின்டெக் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 591 கோடி ரூபாய் ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதிகளை வழங்குவதற்கான நிதி சார்ந்த உள் கட்டமைப்புகளை ஏற்படுத்திய நிறுவனம் தான் இது. இந்த நிறுவனம் தற்போது சிறு நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருள் சேவைகளையும் வழங்கி வருகிறது .

நியோஜின் ஃபின்டெக் நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 45 ரூபாய், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 97 ரூபாய் ஆகும். இந்த நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யு 10 என்ற அளவிலும் புக் வேல்யூ 28.59 என்ற அளவிலும் இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் நிதி நிலவரத்தை பார்க்கும் போது 2024 ஆம் ஆண்டு 198 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது. இந்த நிறுவனத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் 43.72 சதவீத பங்குகளையும் , புரமோட்டர்கள் 39.31 சதவீத பங்குகளையும் வெளிநாட்டு நிறுவனங்கள் 15 . 92 சதவீத பங்குகளையும் சொந்தமாக கொண்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+