மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்திய ஈக்விட்டிகளின் தரத்தினை overweight என்ற நிலையில் இருந்து equal-weight என்று குறைத்துள்ளது.
இது சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில் தரம் குறைக்கப்பட்டுள்ளது.
இது சந்தையில் ஏற்படும் சரிவினையடுத்து, இது சந்தையினை மேற்கொண்டு ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையில் திருத்தம் இருக்கலாம்
நாட்டின் முக்கிய ஃபண்டமெண்டல் காரணிகள் சந்தைக்கு சாதகமாக உள்ள நிலையில், சந்தையானது 25% வருவாய் அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கைக்கு முன்பாக, இந்திய சந்தையில் ஒரு திருத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையானது சரியலாம்
மேலும் இந்தியாவின் மத்திய வங்கியானது பிப்ரவரியில் வட்டி விகித உயர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகப்படியான எனர்ஜி செலவினங்கள் உள்ளிட்ட பல காரணிகளும் சந்தையின் சரிவுக்கு காரணமாக அமையலாம். இதற்கிடையில் மார்கன் ஸ்டான்லியின் இந்த அறிக்கைக்கு பிறகு, மற்ற தரகு நிறுவனங்களான நோமுரா மற்றும் யுபிஎஸ் உள்ளிட்டவையும் தரக்குறைப்பினை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல வளர்ச்சி
நடப்பு ஆண்டில் இந்திய பங்குகள், மற்ற வளர்ந்து வரும் சந்தைகளை விட நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. MSCI India index இந்தியா குறியீடு 27.53% அதிகரித்துள்ளது. இதே மற்ற MSCI Emerging Market index ஆனது 0.65% சரிவினைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு சிறந்த வருவாய் மற்றும் சிறந்த அரசாங்க சீர்திருத்த நடவடிக்கைகள், உள்ளிட்ட காராணிகள் சிறந்த செயல்பாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது எனலாம்.
தரகு நிறுவனம் எதிர்பார்ப்பு
முன்னதாக இந்த தரகு நிறுவனம் மூலதன செலவினம், அரசின் ஆதரவான கொள்கைகள், வலுவான உலகளாவிய வளர்ச்சி குறித்தான சாதகமான கண்னோட்டம் உள்ளிட்ட பல சாதகமான காரணிகளுக்கு மத்தியில் இந்தியாவின் வருமானம், அடுத்த 3 - 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 20% வளர்ச்சி காணலாம் என்று தரகு நிறுவனம் முன்னதாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லாபம் குறையலாம்
பல காரணிகள் சந்தைக்கு காரணமாக இருந்தாலும், அடுத்த 3 - 6 மாதங்கள் அதிகளவிலான வருமானத்தினை கட்டுப்படுத்தலாம் எனவும் மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.
நடப்பு ஆண்டில் ப்ளூசிப் என் எஸ் இ நிஃப்டி 50 குறியீடு கிட்டதட்ட 28% அதிகரித்து, முதல் முறையாக 18,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. எனினும் கடந்த வியாழக்கிழமையன்று கிட்டதட்ட 2% வீழ்ச்சியினை கண்டது. இதே வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது கிட்டதட்ட 4% சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு சற்று சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications