சென்னை: உலகளாவிய பிரபல தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி, ஜூன் 2027-ல் சென்செக்ஸ் எங்கு செல்லும் என மூன்று வகையான கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தையின் எதிர்காலம் குறித்து முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கை, தற்போதைய சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

மூன்று நிலைகளில் சென்செக்ஸ்
மார்கன் ஸ்டான்லியின் கணிப்பின்படி, இந்திய பங்குச்சந்தை மோசமான நிலையில் (Worst Case) இருந்தால் சென்செக்ஸ் 66,000 புள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இது தற்போதைய நிலையில் இருந்து 16 சதவீத வீழ்ச்சியாகும்.
இதுவே அடிப்படை கணிப்பு (பேஸ் கேஸ்) கணிப்பின் படி சென்செக்ஸ் 89,000 புள்ளிகளாக இருக்கும் என 50 சதவீத சதவீத வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அளவில் இருந்து 14 சதவீத உயர்வை காட்டுகிறது.
பங்குச்சந்தை சிறந்த சூழ்நிலையில் (பெஸ்ட் கேஸ்) சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகளைத் தொடும் எனவும், இதற்கு 25 சதவீத வாய்ப்பு உள்ளது என்றும் மார்கன் ஸ்டான்லி தனது கணிப்பில் தெரிவித்துள்ளது. மோசமான மற்றும் சிறப்பான கணிப்புகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் 34,000 புள்ளிகள்.
மார்கன் ஸ்டான்லி, இந்திய சந்தையின் தற்போதைய விலை மதிப்பு குறைவு (டி-ரேட்டிங்) தற்காலிக சுழற்சி தன்மை கொண்டது எனக் கூறியுள்ளது. நீண்டகால வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சந்தை மதிப்புகள் மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளது.
தற்போதைய குறைவான செயல்திறன் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உரிமை அளவு குறைந்துள்ள நிலையில், இது பங்குச்சந்தைக்கு நல்லதாக அமையும் என அந்த நிறுவனத்தின் ஈக்விட்டி ஸ்ட்ராடஜிஸ்டுகள் ரிதம் தேசாய் மற்றும் நயன்த் பாரேக் தெரிவித்துள்ளனர்.
முதலீட்டாளர்களுக்கு என்ன பொருள்?
இந்த கணிப்புகள் சந்தையின் எதிர்காலம் குறித்து தெளிவான படத்தை கொடுக்கவில்லை என்பதை மார்கன் ஸ்டான்லியே ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலிமை மற்றும் வளர்ச்சி சாத்தியங்கள் இருப்பதால், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்பதே முக்கிய செய்தி.
முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற இறக்கங்களை புரிந்துகொண்டு, தங்கள் இலக்குகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த அறிக்கை நினைவூட்டுகிறது.


Click it and Unblock the Notifications