பங்குச் சந்தையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் குறிப்பிட்ட சில துறைகள் அசுர வளர்ச்சி காணும். அந்த வகையில், தற்போது செமிகண்டக்டர் துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கு ஒரு பிராகசமான வாய்ப்புகள் காணப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் இதர மின்னணு சாதனங்கள் இயங்க சிப்கள் மிகவும் முக்கியம். இந்த சிப்களை தயாரிக்க செமிகண்டக்டர்கள் அவசியம். இன்று உலகம் முழுவதும் செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகமாக காணப்படுகிறது.

ஆனால் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை, இதனால் செமிகண்டக்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் செமிகண்டக்டர்கள் தயாரிப்பு ஆலையை நிறுவ தீவிரம் காட்டி வருகின்றன. நம் நாட்டில் மத்திய அரசு, செமிகண்டக்டர்கள் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நம் நாட்டில் செமிகண்டக்டர்கள் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.92 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2030ம் ஆண்டுக்குள் ரூ.6.66 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இந்த துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது.
இதனால் இந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சி காண வாய்ப்புள்ளது. செமிகண்டக்டர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செமிகண்டக்டர் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மோஸ்சிப் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை கடந்த மாதம் 120 சதவீதம் அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை இப்பங்கு கொடுத்துள்ளது.
மோஸ்சிப் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலோபாய கூட்டு வர்த்தகங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் மத்திய அரசின் ஆதரவு போன்றவற்றால் பங்கு விலை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 40 சதவீதம் அதிகரித்து ரூ.75.42 கோடியாக உயர்ந்துள்ளது.
2023 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.53.83 கோடி ஈட்டியிருந்தது. 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் லாபமாக ரூ.87 லட்சம் ஈட்டியுள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 204 அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 282 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.3287.35ஆக இருந்தது.
இந்த மாத தொடக்கத்தில் மோஸ்சிப் டெக்னாலஜிஸ் நிறுவனம், சிடிஏசி நிறுவனத்திடம் இருந்து ரூ.509.37 கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தை சிடிஏசி நிறுவனத்திடமிருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் 4 ஆண்டு கால ஒப்பந்தமாகும். இந்நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 47.32 சதவீதம் புரோமோட்டர்ஸ் வசம் உள்ளது. 49.76 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களிடம் உள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications