மீடியம் டெர்மில் 25% வரையில் லாபம் கொடுக்கலாம்.. மோதிலால் ஆஸ்வாலின் பலே பரிந்துரை!

பொதுவாக தற்போது பங்கு சந்தையில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், பங்கு சந்தையில் முதலீடா? சற்று யோசித்து செய்யலாம் என்பவர்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது.

ஆனால் என்னதான் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நல்ல நிறுவனங்களின் சில பங்குகள் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றளனர்.

சரி அப்படி என்ன பங்கினை பரிந்துரை செய்துள்ளனர். என்ன நிறுவனம் அது? ஏன் வாங்கலாம்? இப்பங்கின் தற்போதைய நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

என்ன பங்கு?

என்ன பங்கு?

இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கு ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் லிமிடெட் (apl apollo tubes ltd) பற்றி தான்.

இந்த நிறுவனம் தற்போது 10 மாநிலங்களில் உள்ளது. 90 மொத்த விற்பனை தளம் உள்ளது, ஆண்டுக்கு 2.6 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது இந்தியாவில் மிகப்பெரிய கட்டுமான கம்பி உற்பத்தியாளராக உள்ளது. நாடு முழுவதும் 29 நகரங்களில் கிடங்குகள் மற்றும் கிளைகளையும் கொண்டுள்ளது. அதேபோல20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றது. இது 1100 -க்கும் மேற்பட்ட கட்டமைப்பு கம்பிகள், ப்ரீ கல்வனைஸ்டு டியூப்ஸ், எம் எஸ் பிளாக் பைப்ஸ் மற்றும் ஹாலோ பிரிவு என பல பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றது.

 

மோதிலால் ஆஸ்வால்

மோதிலால் ஆஸ்வால்

இதற்கிடையில் மேற்கொண்டு இதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக, சங்கரா பில்டிங் புராடக்ட்ஸில் 4.38% பங்குகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கரா APATன் புதிய தயாரிப்புகளுக்கு ஏபிஎல் புதிய வெளியீட்டு தளமாகவும் இருக்கலாம். இது இன்னும் வணிக ரீதியாக பலவற்றில் கவனம் செலுத்தவும் உதவும். குறிப்பாக கட்டுமான கம்பிகள் விற்பனையை விரிவாக்கம் செய்ய உதவும். மொத்தத்தில் எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க இது காரணமாக அமையலாம்.

இலக்கு விலை

இலக்கு விலை

இதற்கிடையில் தான் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இப்பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதன் தற்போதைய விலை 963 ரூபாய் என்ற லெவலில் கொடுக்கப்பட்டது. இதன் இலக்கு விலை 1200 ரூபாயாகும். இதன் 1 வருட லாபம் 25% இருக்கலாம் என்றும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.

 தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் லிமிடெட்நிறுவனத்தின் பங்கு விலையானது கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று 0.17% குறைந்து, 900.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1114.55 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 585 ரூபாயாகும்.

இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது 0.32% குறைந்து, 900 ரூபாயாக முடிவுற்றுள்ளது.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+