இந்திய பங்கு சந்தையினை பொறுத்தவரையில் சமீபத்திய காலமாகவே வங்கி பங்குகள் என்பது சிறந்த பெர்பார்மன்ஸை கொடுத்து வருகின்றன. இனியும் வரவிருக்கும் காலாண்டுகளிலும் இந்த போக்கு என்பது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
குறிப்பாக வங்கிகளின் கடன் வளர்ச்சி, வங்கிகளின் வாரக்கடன் சரிவு, சொத்தின் தரம் மேம்பாடு என பல சாதகமான காரணிகளுக்கு மத்தியில், அவற்றின் மார்ஜின் விகிதம் என்பது மேம்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வங்கி பங்குகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இனியும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
10% சரிவு
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி. இப்பங்கு நடப்பு ஆண்டில் இதுவரையில் 942 ரூபாயில் இருந்து, 845 ரூபாய் என்ற லெவலுக்கு சரிவினைக் கண்டுள்ளது. 2023ம் ஆண்டில் 10% சரிவினைக் கண்டுள்ளது.
எனினும் இந்த காலகட்டத்திலும் கூட தரகு நிறுவனங்கள் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.
விலை அதிகரிக்கலாம்
தரகு நிறுவனம் ஆக்ஸிஸ் வங்கி பங்கினை 1100 ரூபாய் வரையில் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது. இது தற்போதைய லெவலில் இருந்து 30% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும் ஒன்றாகவும் மாறலாம். Prabhudas Lilladher research ஆய்வறிக்கையானது, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கி இணைப்பானது வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
இந்த இணைப்பு நடவடிக்கையால் ஆக்ஸிஸ் வங்கியின் செயல்பாடு என்பது அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு CAGR விகிதம் 205 வரையில் ஏற்றம் காண வழிவகுக்கலாம். இதற்கிடையில் இவ்வங்கியில் காசா வீதமும் அதிகரிக்கலாம்.
மோதிலால் ஆஸ்வாலின் கணிப்பு
ஆக்ஸிஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கியின் இணைப்பும் வங்கி வணிகம் மேம்படலாம். இதன் காரணமாக ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வணிகம், சொத்து மதிப்பு, சில்லறை வணிகம், வங்கி செயல்பாடு என பலவும் விரிவடையலாம். இதன் இலக்கு விலையை 1130 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
விலை அதிகரிக்கலாம்
கடந்த மார்ச் 2022ல் அறிவிக்கப்பட்ட இந்த கையகப்படுத்தல் குறித்த அறிவிப்புக்கு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு வந்தது. நிதி சேவை குறித்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பானது 1.41 பில்லியன் டாலராகும். (இதன் இந்திய மதிப்பு 11,630 கோடி ரூபாயாக உள்ளது. ஆக இதுவும் ஆக்ஸிஸ் வங்கியின் வளர்ச்சிக்கு நீண்டகால நோக்கில் துணை புரியலாம். இது இப்பங்கின் விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம்.
போட்டியை எதிர்கொள்ள உதவும்
இதன் மூலம் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைவானதாக உள்ள நிலையில், அந்த இடைவெளியினை இந்த கையகப்படுத்தல் நிரப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications