30%க்கும் மேல் லாபம் தரப்போகும் முத்தான 3 பங்குகள்.. மோதிலால் ஓஸ்வால் வெளியிட்ட பட்டாசு லிஸ்ட்..!!

பிரபல பங்குச்சந்தை தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் முற்றிலும் வேறுபட்ட துறைகளை சார்ந்த மூன்று பங்குகளை நம்பி வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இந்த நிறுவன பங்குகள் தற்போதைய சந்தை விலையில் இருந்து 19% முதல் 37% வரை விலை உயரும் வாய்ப்புள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

SPR ஆட்டோ டெக்னாலஜிஸ் (SPR Auto Technologies): SPR ஆட்டோ டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது பாரம்பரிய பிஸ்டன் தயாரிப்பு தொழிலை மட்டுமே சார்ந்திருப்பதை மாற்றி, பிற வாகன உதிரிபாக துறைகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, மொபிலிட்டி சார்ந்த வணிகத்தை வலுப்படுத்த ஆன்டலின் , தகஹதா , TGPEL மற்றும் EMFi போன்ற நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது.

30%க்கும் மேல் லாபம் தரப்போகும் முத்தான 3 பங்குகள்.. மோதிலால் ஓஸ்வால் வெளியிட்ட பட்டாசு லிஸ்ட்..!!

இந்த உத்திகள் மூலம் நிறுவனத்தின் வருவாய் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என மோதிலால் ஓஸ்வால் எதிர்பார்க்கிறது. FY26 மற்றும் FY29-க்கு இடைப்பட்ட காலத்தில் வரிக்கு பிந்தைய லாபம் ஆண்டுதோறும் 21% கூட்டு வளர்ச்சி விகிதத்தை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று 4,640 ரூபாயாக உள்ள இந்த நிறுவன பங்கு ஓராண்டில் 37% வரை உயர்ந்து 6,150 ரூபாய் என்ற அளவை எட்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் (Niva Bupa Health Insurance): காப்பீட்டுத் துறையின் விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், நிவா பூபா போன்ற நிறுவனங்கள் குறுகிய காலத்தில் சில சவால்களைச் சந்திக்க நேரிடலாம், எனினும், நீண்ட கால அடிப்படையில் இந்த மாற்றங்கள் காப்பீட்டு துறைக்கு மிகவும் சாதகமாக அமையும் என மோதிலால் ஓஸ்வால் கூறுகிறது.

Also Read

நிவ பூபாவை பொறுத்தவரை நிறுவனத்தின் மேலாண்மை செலவுகள் , மொத்த பிரீமியத்தில் தற்போது உள்ள 25%-லிருந்து அடுத்த ஐந்தாண்டுகளில் 20%-ஆக குறையும் என கணித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்னும் பல கோடி இந்தியர்கள் காப்பீட்டு வரம்புக்குள் வருவார்கள் என்பதால் இந்த துறையே வளரும் அதில் இந்த இந்நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்கிறது. இன்று இதன் ஒரு பங்கு விலை 77 ரூபாய். இது 30%க்கும் மேல் வளர்ந்து 100 ரூபாயை எட்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இண்டஜீன் (Indegene): உலகளாவிய லைஃப் சயின்சஸ் மற்றும் மருந்து துறைக்கு தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான இண்டஜீன் மீது மோதிலால் ஓஸ்வால் தனது பார்வையை பாசிடிவாக மாற்றி, அதை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இன்று 600 ரூபாயாக இருக்கும் இந்த பங்கின் விலை ஓராண்டில் 700 ரூபாயை எட்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

Recommended For You

பார்மா நிறுவனங்களுக்கு அதிகரித்து வரும் மருந்து தயாரிப்பு பணிகள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் புதிய நோய்களுக்கான ஆராய்ச்சிகள் ஆகியவற்றை அவுட்சோர்சிங் முறைக்கு கொடுக்க நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுப்பது இண்டஜீன் நிறுவனத்திற்கு பெரும் வளர்ச்சி வாய்ப்பாக அமையும் என கணிக்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+