இந்திய பங்கு சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் என்பது நிலவி வரும் நிலையில், நல்ல செயல்திறனை கொண்டுள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகள் கூட சரிவினைக் கண்டுள்ளன. இந்த நிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் டாடா குழுமத்தின் இரு பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
டிசிஎஸ்
மோதிலால் ஆஸ்வால் தரகு நிறுவனம், டாடா குழுமத்தினை சேர்ந்த டிசிஎஸ் நிறுவனத்தினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையாக 3810 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய சந்தை விலையில் இருந்து 30% ஏற்றத்தினை காணலாம் என கணித்துள்ளது.
நல்ல வளர்ச்சி
டிசிஎஸ் நிறுவனத்தினை விட்டு வெளியேறியுள்ள ராஜேஷ் கோபிநாதன் ஆறு ஆண்டுகள் மட்டுமே நிறுவனத்தினை வழி நடத்தினார். எனினும் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். சமீபத்திய காலமாக தனது போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி நல்ல வளர்ச்சியினையும் கண்டார். இது சில சவால்களை கண்டிருந்தாலும் வளர்ச்சி என்பது மற்ற நிறுவனங்களை காட்டிலும் சிறப்பாகவே இருந்தது.
இலக்கு விலை
இதற்கிடையில் FY23 - 25ம் ஆண்டு 16 சதவீதம் வளர்ச்சியினை காணலாம் என கணித்துள்ளது. இதற்கிடையில் தான் இலக்கு விலையை 3810 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இது இன்னும் 20% ஏற்றம் காண வாய்ப்புள்ளதாகவும், இதற்கிடையில் தான் இந்த நிறுவன பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது தரகு நிறுவனம்.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறித்து பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம், இதனையும் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் லாபமும் தொடர்ந்து நிலையாக இருந்து வரும் நிலையில், இதன் நிதி நிலை அறிக்கையும் வலுவாக காணப்படுகின்றது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் பங்கு விலை அதிகரிக்கலாம் என தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது.
டாடா மோட்டார்ஸ் இலக்கு விலை
இப்பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ள மோதிலால் ஆஸ்வால் நிறுவனம், இப்பங்கின் விலையானது படிப்படியாக அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. இதன் இலக்கு விலையை 540 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் எபிட்டா விகிதமும் நல்ல வளர்ச்சியினை காணலாம் என கணித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications