சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், உள்நாட்டு சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களை வாங்க மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வாங்க பரிந்துரை செய்துள்ளது.
நிஃப்டி கடந்த ஆண்டினை காட்டிலும் 9% அதிகரித்துள்ளது. இதற்கு வங்கித் துறையானது தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் நிலையில், தொடர்ந்து BFSI குறியீடானது ஏற்றம் கண்டு வருகின்றது.
வருன் பேவரேஜஸ்
இதற்கிடையில் மோதிலால் நிறுவனம் ஸ்மால் கேப், மிட் கேப் பங்குகள் சிலவற்றை பரிந்துரை செய்துள்ளது. இதில் வருன் பேவரேஜஸ், அசோக் லேலாண்ட், ஜுபிலியண்ட் ஃபுட் ஒர்ஸ் உள்ளிட்ட பங்குகள் இதில் அடங்கும்.
வருன் பேவரேஜஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் 58.7% வரிக்கு பிந்தைய லாபம் அதிகரித்து, 381 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் எபிட்டா விகிதம் 41.3% அதிகரித்து, 699 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனை 32.5% அதிகரித்து, 3176 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அசோக் லேலாண்ட்
முன்னணி வாகன உற்பத்தியாளரான அசோக் லேலாண்ட் நிறுவனம் கடந்த காலாண்டினை காட்டிலும், 226.6% வரிக்கு பிந்தைய லாபம் அதிகரித்து, 193.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் எபிட்டா விகிதம் 298.9% அதிகரித்து, 537.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனையானது 85.4% அதிகரித்து, 8266 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஜூபிலியண்ட் புட் ஒர்க்ஸ்
ஜூபிலியண்ட் புட் ஒர்க்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் (PAT) கடந்த ஆண்டினை காட்டினாலும் 2.9% குறைந்து, 119.2 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதன் எபிட்டா விகிதம் 9.2% அதிகரித்து, 312.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனை விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 16.9% அதிகரித்து, 1286.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வினாதி ஆர்கானிக்ஸ்
கெமிக்கல் நிறுவனமான வினாதி ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின வரிக்கு பிந்தைய லாபம், கடந்த ஆண்டினை காட்டிலும் 42.6% அதிகரித்து, 116 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே எபிட்டா விகிதம் 47% அதிகரித்து, கடந்த ஆண்டினை காட்டிலும் 148.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனை விகிதமானது, 51.4% அதிகரித்து, 566.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மெட்ரோ பிராண்ட்ஸ்
புட்வேர் நிறுவனமான மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம், 40.6% அதிகரித்து, 77.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் எபிட்டா விகிதம் 52% அதிகரித்து, 147.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனை விகிதமானது 46.5% அதிகரித்து, 476.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏஞ்சல் ஓன்
ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 59% அதிகரித்து, 213.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் எபிட்டா விகிதம் 59.2% அதிகரித்து, 285.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனை விகிதமானது 52.4% அதிகரித்து, 455.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கேம்ஸ் சர்வீசஸ்
கேம்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 0.6% குறைந்து, 72.1 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதன் எபிட்டா விகிதம் 0.3% அதிகரித்த்ஹு, 106.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனை விகிதமானது 16.5% அதிகரித்து, 242.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
லெமன் ட்ரீ ஹோட்டல்
லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 3.8% குறைந்து, 16.8 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எபிட்டா விகிதம் 176.4% அதிகரித்து, 93.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் விற்பனையானது 103% அதிகரித்து, 196.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications