இந்தியாவின் முன்னணி மற்றும் பிரபலமான டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எஃப் பங்குகளின் விலை முதல் முறையாக 1,00,000 ரூபாய் அளவை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. MRF நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டுள்ளது.
மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்பது தான் MRF என்பதன் விரிவாக்கம், MRF நிறுவனம் MRF டயர்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவை குறிப்பாக சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு டயர் உற்பத்தி நிறுவனமாகும். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறுவனமாகவும் உள்ளது.

MRF நிறுவனம் டயர்கள், டிரெட்ஸ், டியூப்கள் மற்றும் கன்வேயர் பெல்ட்கள், பெயிண்ட் மற்றும் பொம்மை உள்ளிட்ட பல ரப்பர் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்கிறது. MRF லிமிடெட் AAA- பிராண்ட் தரத்துடன் உலகின் இரண்டாவது வலிமையான டயர் தயாரிப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச்சந்தையில் MRF பங்குகள் தான் இப்போது மிகவும் விலையுயர்ந்த பங்குகளாக உள்ளது. MRF நிறுவனத்தை தொடர்ந்து பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன், ஸ்ரீ சிமெண்ட், 3எம், ABBOT, நெஸ்லே போன்றவை விலையுயர்ந்த பங்குகள் பட்டியலில் உள்ளது.
MRF பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் முதல் முறையாக 1 லட்சம் ரூபாய் அளவீட்டை தொட்டுள்ளது மட்டும் அல்லாமல், அதன் 52 வார உச்ச அளவீட்டை 1,00,300 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் MRF நிறுவனத்தின் சந்தை மதிப்பு 42,328 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
MRF பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 98,939.70 ரூபாயாக முடிந்தது, இன்று காலை 99500 ரூபாய் விலையில் துவங்கி அதிகப்படியாக 1,00,300 ரூபாய் வரையில் உயர்ந்து புதிய 52 வார உயர்வு அளவீட்டை தொட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டில் MRF பங்குகள் 13.31 சதவீதம் வளர்ச்சி அடைந்து அசத்தியுள்ளது, இதேபோல் கடந்த ஒரு வருடத்தில் 45.57 சதவீதமும், 5 வருடத்தில் 32.28 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 1996ல் பங்குச்சந்தையில் 2500 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட MRF பங்குகள் சுமார் 3,844.86 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications