இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், இந்திய நிறுவனங்கள் முதலீட்டாளர்களை தக்கவைத்துக்கொள்ள அதிரடியான முடிவுகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய காலாண்டு முடிவுகள் உடன் ஈவுத்தொகை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இன்னும் சில நிறுவனங்கள் போனஸ் பங்குகள், பங்கு பிரிப்பு போன்ற அதிரடியான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு பெரும் வர்த்தக வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான பேக்கரி நிறுவனம் தற்போது பங்கு பிரிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டீஸ் நிறுவனம், தனது பங்குகளை 5:1 விகிதத்தில் பிரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இந்நிறுவனத்தின் பங்குகள் எண்ணிக்கையை பங்கு சந்தையில் அதிகரிக்கும், சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குகளை எளிதில் வாங்கும் வகையில் வாய்ப்பை உருவாக்க உள்ளது.
ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கு, ரூ.2 முகமதிப்பு கொண்ட ஐந்து பங்குகளாக பிரிக்கப்படும். இதற்கு முதலீட்டாளர்கள் எவ்விதமான தொகையும் செலுத்த தேவையில்லை, இதேபோல் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பிலும் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
இந்த பங்கு பிரிப்பு தேதி இன்னும் உறதி செய்யப்படவில்லை, இதேபோல் இதற்கு பங்குதாரர்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல் தேவை. இதற்கான ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதி அறிவிக்கப்படும்.

பங்கு பிரிப்பின் நன்மைகள்
உதாரணமாக, ரூ.10 முகமதிப்பு கொண்ட 100 பங்குகளை நீங்கள் வைத்திருந்தால், பங்கு பிரிப்புக்குப் பின் ரூ.2 முகமதிப்பு கொண்ட 500 பங்குகளை பெறுவீர்கள்.
தற்போது மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டீஸ் நிறுவன பங்கு மதிப்பு வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 3.01 சதவீதம் அதிகரித்து 1400 ரூபாய் அளவில் வர்த்தகமாகி முடிந்தது. 2025ஆம் ஆண்டில் 14.62 சதவீதம் சரிவில் உள்ளது. இந்நிறுவனம் 2020ல் ஐபிஓ வெளியிட்டதில் இருந்து இதுவரையில் 135.61 சதவீதம் உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் பின்னணி
மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டீஸ் லிமிடெட், 1995 செப்டம்பர் 15ஆம் தேதி குவேக்கர் கிரெமிகா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தான் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் முதலில் பிஸ்கெட் மற்றும் பேக்கரி பொருட்களை உற்பத்தி செய்து, மிஸஸ் பெக்டர்ஸ் கிரெமிகா மற்றும் மிஸஸ் பெக்டர்ஸ் இங்கிலிஷ் ஓவன் என்ற பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்கிறது.
இந்நிறுவனத்தை 1978ஆம் ஆண்டு மிஸஸ் ராஜ்னி பெக்டர் தொடங்கினார், இப்போது ஐஸ்கிரீம், பிரெட் மற்றும் பிஸ்கெட் உற்பத்தியில் ஈடுபட்டார். தற்போது, 25 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவம் கொண்ட அனூப் பெக்டர் இந்நிறுவனத்தை முன்னெடுத்து நிர்வாகம் செய்து வருகிறார்.

ஏற்றுமதி மற்றும் விநியோகம்
மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் நிறுவனம் தனது பொருட்களை 60 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் இந்நிறுவனம் இந்திய ரயில்வே மற்றும் அரசு உணவகங்கள் போன்ற அரசு அமைப்புகளுக்கு வழங்குகிறது.
இதோடு இல்லாமல் மெக்டொனால்ட்ஸ், சப்வே மற்றும் யம் பிராண்டுகளுக்கு பிரெட் மற்றும் பல பொருட்களை வழங்கி வருகிறது.
காலாண்டு முடிவுகள்
மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டீஸ், 2026ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கலவையான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. ஜூன் 2025இல் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 7.6 சதவீதம் அதிகரித்து ரூ.473 கோடியாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டு அதே காலத்தில் ரூ.439.4 கோடியாக இருந்தது.
மொத்த லாபம் 2.3 சதவீதம் உயர்ந்து ரூ.215.8 கோடியை எட்டியுள்ளது, ஆனால் மொத்த லாப விகிதம் 48 சதவீதத்தில் இருந்து 45.6 சதவீதமாக குறைந்துள்ளது. EBITDA 9 சதவீதம் குறைந்து ரூ.58.2 கோடியாகவும், அதன் விகிதம் 14.6 சதவீதத்தில் இருந்து 12.3 சதவீதமாகவும் உள்ளது. வரி செலுத்திய பிறகு லாபம் 12.8 சதவீதம் குறைந்து ரூ.30.9 கோடியாக உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications