பிஎஸ்என்எல் நிறுவனத்தின் துணை நிறுவனம் மகாநகர் டெலிபோன் நிகாம் (எம்டிஎன்எல்). இந்நிறுவனம் மும்பை மற்றும் டெல்லியில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மேலும் கடன் சுமையால் என்டிஎன்எல் தள்ளாடி வருகிறது. 2024ம் ஆண்டில், இந்நிறுவனத்துக்கு வழங்கிய கடனை பல பொதுத்துறை வங்கிகள் வாராக் கடனாக வகைப்படுத்தின. இந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.
ஆனால், இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே எம்டிஎன்எல் நிறுவன பங்கின் விலை 18 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் நிலம் மற்றும் கட்டிட சொத்துக்களை பணமாக்குவதன் மூலம் ரூ.2,135 கோடி திரட்டியதாக நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதன் எதிரொலியாக இன்று பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை மளமளவென உயர்ந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் எழுத்துப்பூர்வமான பதிலில், 2019ம் ஆண்டு முதல் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் சொத்துக்களை பணமாக்குவதன் மூலம் மொத்தம் ரூ.12,984.86 கோடி திரட்டியுள்ளன.
2025 ஜனவரி வரை எம்டிஎன்எல் நிறுவனம் தனது நிலம் மற்றும் கட்டிட சொத்துக்களை பணமாக்குவதன் மூலம் ரூ.2,134.61 கோடி திரட்டியுள்ளது. இந்த வழிமுறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2,387.82 கோடி திரட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் டவர் மற்றும் ஃபைபர் உள்ளிட்ட சொத்துக்களின் பணமாக்குதலின் மூலம் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் முறையே ரூ.8,204.18 கோடி மற்றும் ரூ258.25 கோடி திரட்டின. எதிர்காலத்தில் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு தேவையில்லாத நிலம் மற்றும் கட்டிட சொத்துக்களை மட்டுமே பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் பணமாக்குகின்றன. மேலும் அவற்றின் உரிமையை மாற்றும் உரிமையும் அந்நிறுவனங்களுக்கு உண்டு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் இன்று எம்டிஎன்எல் நிறுவன பங்கின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளபோதிலும், இப்பங்கின் விலை அதன் 52 வார உச்சவிலையை காட்டிலும் மிகவும் குறைவாகவே உள்ளது. 2024 ஜூலை 29ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே எம்டிஎன்எல் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.101.88ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார குறைந்தபட்ச விலையை காட்டிலும் சுமார் 56 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.31.24க்கு சென்றது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications