முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, இன்று தொடக்கத்தில் இருந்தே சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இன்று காலை தொடக்கத்தில் 2,487 ரூபாயாக தொடங்கிய நிலையில், இதுவரையில் அதிகபட்சமாக 2527 ரூபாயினை தொட்டுள்ளது.
இது தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 52 வார உச்ச விலையும் ஆகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 1,830 ரூபாய் ஆகும்.
எகிறிய சந்தை மூலதனம்
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஆனது கிட்டத்தட்ட 17 லட்சம் கோடியை நெருங்கி வந்து, தற்போது மீண்டும் சற்று குறைந்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்னும் எதிர்காலத்தில் சற்று அதிகரிக்கும் விதமாகவே உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
புதிய உச்சத்தில் பங்கு விலை
இன்று காலை தொடக்கத்திலேயே இந்த பங்கின் விலையானது 2,500 ரூபாயினை தாண்டிய நிலையில், இந்த புதிய உச்சமான 2527 ரூபாயினை எட்டியுள்ளது. இது இதற்கு முன்பு செப்டம்பர் 6 அன்று இந்த பங்கின் விளையாட 2,478 ரூபாயாக உச்சம் தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பங்கின் விலையானது ,மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஓராண்டு நிலவரம் என்ன?
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த ஓராண்டில் மட்டும் 25% மேலாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தொடர்ச்சியாக இந்த பங்கின் விலையானது, கடந்த நான்கு அமர்வுகளாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல்வேறு தரகு நிறுவனங்களும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்னும் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என கணித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து முதலீடுகள்
இந்த நிறுவனத்தின் ரிலையன்ஸ் ஜியோவின் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வர்த்தகம் உள்ளிட்ட பல வணிக விரிவாக்கத்தில், அதன் ஆயில் டூ கெமிக்கல் வர்த்தகமும் மாபெரும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து இந்தத் துறைகளில் அடுத்தடுத்து முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பலவாறு கையகப்படுத்தல்
மேற்கொண்டு பல புதிய நிறுவனங்களிலும் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்ய செய்து வருகின்றன. பல நிறுவனங்களையும் கையகப்படுத்தி வருகின்றது. இது தொடர்ந்து மேலும் விரிவாக்கத்திற்கு உதவிகரமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் நிபுணர்கள் இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என கணித்து வருகின்றனர்.
பங்கு விலை அதிகரிக்கலாம்
குறிப்பாக நுகர்வோர் சம்பந்தமான வணிகம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி காணலாம் என்றும் கணித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் கிளீன் எனர்ஜி வணிகம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதன் வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
பங்கினை ஹோல்ட் செய்யலாம்
மேலும் ஏற்கனவே ரிலையன்ஸ் பங்கினை வைத்திருப்பவர்கள், இதனை ஹோல்ட் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் ஜூன் வரையிலான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வருவாய் ஆனது, 1,48.591 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 6% முந்தைய காலாண்டினை காட்டிலும் குறைவாகும். இது முந்தைய காலாண்டில் 1,58,133 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸின் லாபம்
இதேபோல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபமும் 12,273 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 13,227 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது, இன்று தொடக்க நிலையிலிருந்து 14% வரையில் ஏற்றம் காணலாம் என சந்தை நிபுணர்கள் கணித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த பங்கின் விலையானது இதுவரை 7% அதிகரித்துள்ளது.
பங்கு இலக்கு
இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையில் நிலவி வருகிறது. இதற்கிடையில் நிபுணர்கள் இந்த பங்கின் விலையானது 2,700 ரூபாய் தொடலாம் என்று கணித்துள்ளனர். இதனையடுத்து ஃபண்டமெண்டல் ரீதியாகவும், டெக்னிக்கலாகவும் இந்த பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
வலுவடையும் வணிகம்
இதன் வலுவான டிஜிட்டல் வணிகம், சில்லறை வர்த்தகம், ஆயில் மற்றும் கெமிக்கல் வர்த்தகம் என பல்வேறு வணிகங்களும் மேம்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஷேர்கான் நிறுவனம் இந்த பங்கின் இலக்கானது 2,700 ரூபாயினை இலக்காக நிர்ணயித்துள்ளது.
நல்ல வணிகம்
முகேஷ் அம்பானியின் கிரீன் எனர்ஜி சம்பந்தமான வணிகமும் எதிர்காலத்தில், நல்ல வருவாயும் காணப்படலாம் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. அதாவது எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி அடையலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருவாய் எனது நீண்டகால நோக்கில் வலுவாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பிஎல்ஐ திட்டம்
இந்த நிறுவனம் அரசின் PLI திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மேலும் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு இது ஒரு நல்ல எதிர்காலம் உள்ளது என்றே கூறலாம். டெக்னிக்கலாக இதன் அடுத்த இலக்கு 2,700 ரூபாய் என நிபுணர்கள் கணித்துள்ளனர். எனினும் ஸ்டாப் லாஸ் ஆக 2,340 ரூபாய் என கணித்துள்ளனர்.
**** எப்படியிருப்பினும் இந்த பங்கினை வாங்கும் முன் ஆலோசித்து, இறுதி முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். ஆக கவனமாக நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து இறுதியான முடிவினை நீங்கள் எடுக்க வேண்டும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications