கருப்பு திங்கட்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச வர்த்தக பாதிப்புகள் மத்தியில் இந்திய பங்குச்சந்தையும் மோசமான சரிவை பதிவு செய்துள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பில் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளது.
இன்றைய வரத்தகத்தில் ரிலையன்ஸ் பங்கின் விலை 7.4% வரை குறைந்து, கடந்த 52 வாரங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவான ரூ.1,115.55 ஐ எட்டி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. இன்றைய வர்த்தக சரிவுக்கு முழுக்க முழுக்க அமெரிக்க வரி விதிப்பும் அதன் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பாதிப்பும் தான் முக்கியமான காரணமாக உள்ளது.

இதேவேளையில் அமெரிக்காவுக்கு எதிராக பிற நாடுகளும் வரிகளை விதிக்க துவங்கியிருப்பது அமெரிக்க பொருளாதாரத்தை ரெசிஷனுக்கு தள்ளிவிடும் என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் முதலீட்டு சந்தை தலைகீழாக புரட்டிப்போடும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
இந்த நிலையில் தான் கடந்த ஆறு வர்த்தக நாட்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்ததால், மொத்தமாக 12.7% இழப்பு ஏற்பட்டது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் ரூ.2.26 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியது. தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 15.49 லட்சம் கோடியாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டில் 21.6% சரிவும், கடந்த ஆறு மாதங்களில் 17.4% சரிவும், கடந்த மாதத்தில் 5.3% சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த வாரத்தில் மட்டும் பங்கு 10% சரிவை சந்தித்துள்ளது, இதன் ரிலையன்ஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் பாதிப்பை அளித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சந்தை தொடங்கியதும் கிட்டத்தட்ட 5% வரை சரிந்தன. இது 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான ஒரே நாள் சதவீத சரிவாகும். 12 மணியளவில் சென்செக்ஸ் 2822.80 புள்ளிகள் சரிந்து 72,535 புள்ளிகள் வர்த்தகமாகி வருகிறது, இதேபோல் நிஃப்டி 904.70 புள்ளிகள் சரிந்து 21,999.75 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த சந்தை சரிவுடன் ஒப்பிடும்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒப்பீட்டளவில் குறைந்த வீழ்ச்சியை சந்தித்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தற்போது அதன் 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் சராசரிகளுக்குக் கீழே வர்த்தகம் செய்யப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்த வரிக் கொள்கை வெளியிட்டதை தொடர்ந்து சர்வதேச பங்குச்சந்தையில் விற்பனையை தூண்டியுள்ளது. இது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்து, பரந்த பொருளாதார வீழ்ச்சி குறித்த அச்சங்களை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications