பங்குச்சந்தை முதலீட்டில் வெகு சிலருக்கு, சில நேரத்தில் மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு தான் இந்த மல்டிபேக்கர். தொழில்நுட்ப துறையிலும், கேமிங் துறையில் இருக்கும் இந்நிறுவனத்தின் பங்குகள் 2021ல் பங்குச்சந்தைக்கு வந்த நாளில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த நிறுவனம் குறித்து முழுமையான தகவல் கிடைக்கவில்லை என்றாலும் பங்குச்சந்தையில் பலரும் இந்நிறுவனம் குறித்து பேசி வருகின்றனர். எனவே இந்த தகவலை ஒரு விழிப்புணர்வாகவே பார்க்க வேண்டும். இந்த பங்குகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அப்பர் சர்கியூட் அளவீட்டை எட்டிய வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் என்ன காரணம்..?

கோலாப் பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை அப்பர் சர்கியூட் அளவீட்டை எட்டி ரூ.196.70 அளவீட்டை தொட்டு உள்ளது. இது முந்தைய நாள் வர்த்தக முடிவில் இதன் விலை ரூ.192.85இல் இருந்து 2 சதவீத உயர்ந்துள்ளகு. கடந்த ஒரு ஆண்டில் பங்கு 2,631.94 சதவீத லாபம் தந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 173.84 சதவீத உயர்ந்துள்ளது.
டிரேட் பிரைன்ஸ் வெளியிட்டுள்ள தகவல்படி கோலாப் பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்திய தொழில்நுட்பத் துறையில் வலுவான அடித்தளம் கொண்டதாகும், இந்நிறுவனம் சமீபத்தில் செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் புதிய நிறுவனங்களைத் தொடங்கி விரிவாக்கம் செய்திருக்கும் காரணத்தால் இந்நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளது என டிரேட் பிரைன்ஸ் தெரிவித்துள்ளது.
செமிகண்டக்டர் துறையில் புதிய நிறுவனம்
கோலாப் செமிகண்டக்டர் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய துணை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. இது செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் OSAT சேவைகளில் கவனம் செலுத்தும். இந்தியாவின் வேகமாக வளரும் செமிகண்டக்டர் துறைக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிப்பது மட்டும் அல்லாமல் உலகளாவிய தேவையால் பெரிய அளவில் பயனடைய உள்ளது.
உலகளவில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள், டேட்டா சென்டர் ஆகியவற்றில் செமிகண்டக்டர் சிப் தேவை அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலையில் கோலாப் நிறுவனத்தை இம்முயற்சி பலன் அளிக்கும்.
AI துறையில் புதிய துணை நிறுவனம்
கோலாப் இன்டெலிஜென்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கி AI துறையில் நுழைகிறது கோலாப் பிளாட்பார்ம்ஸ். இது ஆட்டோமேஷன், முன்கணிப்பு பகுப்பாய்வு போன்ற மேம்பட்ட AI தொழில்நுட்பங்களில் செயல்படும். செமிகண்டக்டர் மற்றும் AI ஆகிய இரு உயர் வளர்ச்சி துறைகளில் நுழைவு, கோலாப் நிறுவனத்தின் பங்கு விலையை விரைவாக உயர்த்தியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications