பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 508 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை தந்துள்ளது. சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு கடந்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,174 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அதுவே 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10,789 ரூபாய் என கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் தற்போது அதன் மதிப்பு 6 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் 163 சதவீதமும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 225 சதவீதமும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 13,300 ரூபாய் என தனது 52 வார கால உச்சத்தை தொட்டது.

சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகளுக்கு தேவையான மற்றும் சுரங்க பணிகளுக்கு தேவையான வெடிபொருட்களை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனம் ஆகும். பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட பொருட்களையும் இது உற்பத்தி செய்கிறது.
சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 92,470 கோடி ரூபாய் ஆகும். பங்கின் ஏற்ற இறக்கங்கள் கடந்த ஓராண்டு காலத்தில் சராசரியாகவே இருந்தன என்கின்றனர் பங்குச்சந்தை நிபுணர்கள். இந்த நிறுவனத்தின் Relative strength Index 39.6 என்ற அளவில் இருக்கிறது. அதாவது இந்த நிறுவன பங்கினை யாரும் அதிகம் வாங்கவும் இல்லை, அதிகம் விற்பனை செய்யவும் இல்லை என்ற நிலையில் இருக்கிறது.
சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் லாபம் கடந்த ஓராண்டு காலத்தில் 49.08% உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த நிறுவனத்தின் லாபம் 201 கோடி ரூபாய், தற்போது 300 கோடி என அதிகரித்துள்ளது. அதேபோல நிறுவனத்தின் வருமானமும் கணிசமான அளவு உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் இந்த பங்கினை வாங்கலாம் என மதிப்பீடு செய்துள்ளது. இதன் மதிப்பு 13,250 வரை எட்டு கூடும் என கணித்துள்ளது. இந்த நிறுவன பங்கினை பொருத்தவரைக்கும் புரமோட்டர்கள் 73% பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார்கள். சில்லறை முதலீட்டாளர்கள் சுமார் 26 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
Story Written by: Devika
More From GoodReturns

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications