97000% அதுவும் வெறும் 2 ஆண்டுகளில்.. ரூ.99.94 கோடி ஆர்டரை கைப்பற்றிய மல்டிபேக்கர் பங்கு..!!

பங்குச் சந்தையில் ஸ்மால்கேப் வகையை சேர்ந்த டைமண்ட் பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Diamond Power Infrastructure Limited) நிறுவனத்தின் பங்குகள் அதன் முதலீட்டாளர்களுக்கு சுமார் 97,000 சதவீத மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. நிறுவனம் சமீபத்தில் பவர் கேபிள் மற்றும் கடத்தி உற்பத்தியாளர் ரெவரென்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சரிடமிருந்து (Reverence Infrastructure India LLP) ரூ. 99.94 கோடி ஆர்டரைப் பெற்றுள்ளது.

நிறுவனம் இந்தியாவின் பழமையான கேபிள்கள் மற்றும் கடத்திகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இது ரெவரன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்தியா எல்எல்பி நிறுவனத்திடமிருந்து ரூ.99.94 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. அதாவது இந்த ஆர்டிஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் திட்டத்திற்காக 11KV 240 சதுர அடி XLPE Al 3 கோர் கேபிளை வழங்குவதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. இந்த பணிகள் வரும் ஜூன் 2025க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 97000% அதுவும் வெறும் 2 ஆண்டுகளில்.. ரூ.99.94 கோடி ஆர்டரை கைப்பற்றிய மல்டிபேக்கர் பங்கு..!!

நிறுவனம் இந்தியாவில் மின் கேபிள்கள் மற்றும் கடத்திகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர் ஆகும். இது ஐந்து CCV லைன்கள் மற்றும் கடத்திகளுக்கு ஆண்டுக்கு 2,50,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான நிறுவப்பட்ட திறன் கொண்டது. நிறுவனம், வலுவான, புதுமையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட தயாரிப்புகளை வழங்குவதற்காக இதன் வாடிக்கையாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நிறுவனம் வேகமாக நகரும் மின்சார பொருட்கள் (FMEG) துறையில் 343 கோடி ரூபாய் வருவாயுடன் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக நிலவரப்படி, டைமண்ட் பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்கு ஒன்றுக்கு 1.76% உயர்ந்து ரூ. 1849.95 ஆக இருந்தது. இது முந்தைய நாள் பங்கு ஒன்றுக்கு ரூ.1802.75 ஆக இருந்தது.

அத்துடன் பங்குகள் அதன் 52 வாரங்களில் உயர்ந்த விலையான ரூ.1899 என்ற விலையை எட்டியுள்ளன. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூ. 10.040 கோடியாக உள்ளது. மேலும் இந்த பங்கு வெறும் 3 ஆண்டுகளில் 1,37,000 சதவீதத்திற்கும் அதிகமான மல்டிபேக்கர் வருவாயை ஈட்டியுள்ளது.

அதேபோல், நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு முடிவுகளின் அடிப்படையில், ரூ.224 கோடி வருவாயைப் பதிவுசெய்துள்ளது. இது 2024ம் நிதியாண்டிற்கான இதே காலாண்டுடன் ரூ.74 கோடியுடன் சுமார் 201 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது. 25ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான செயல்பாட்டு லாபம் ரூ. 24 கோடியாக இருந்தது. இது ரூ.11 கோடியுடன் ஒப்பிடுகையில், 11 சதவீத செயல்பாட்டு லாபத்தை குறிக்கிறது.

அதேபோல், முதல் காலாண்டின் நிகர லாபம் ரூ.6 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ. 17 கோடியாக இருந்தது. ஆண்டு செயல்திறனைப் பார்க்கும்போது, 2024ம் நிதியாண்டில் நிறுவனம் 343 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் செயல்பாட்டு லாபம் 43 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் 17 கோடியாக் உள்ளது.

டைமண்ட் பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் பங்குதாரர் முறையின்படி, நிறுவனத்தின் உரிமையாளர்கள் சுமார் 90.59% பங்குகளையும், முதலீட்டாளர்கள் 9.93 சதவீதத்தை வைத்துள்ளனர். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 0.03 சதவீத பங்குகளை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+