Multibagger Stock: ரூ.1 லட்சம் போட்டா ரூ.50 லட்சம்

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 15 நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் லாபத்தை பெற்று தந்துள்ளன என எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பங்குச் சந்தையை பொறுத்தவரை ஸ்மால் கேப் நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகள் பல்வேறு அபாயங்கள் நிறைந்தவை.

அந்த நிறுவனத்தின் பங்கு திடீரென நாம் எதிர்பார்க்காத உச்சத்தை எட்டலாம் இல்லையெனில் மிகப்பெரிய சரிவையும் அடையலாம். எனவே பங்குச்சந்தைகளில் ஸ்மால் கேப் நிறுவனங்களை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

Multibagger Stock: ரூ.1 லட்சம் போட்டா ரூ.50 லட்சம்


இதில் முதல் வகையை சேர்ந்த 15 நிறுவனங்களின் பட்டியலை தான் எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி டைமண்ட் பவர் இன்ஃபிராஸ்ட்ரக்சர் (Diamond power infra)என்ற நிறுவனத்தின் பங்கு மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 84,000 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது.

அதேபோல துருவா கேப்பிட்டல் சர்வீசஸ் (Dhruva capital) , ஸ்ரீ அதிகாரி பிரதர்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க்(sri Adhikari brothers) , வாரி ரினிவபில் (Waree renewable) , எஸ்ஜி மார்ட் (SG Mart), ஜாவேரி கிரெடிட்ஸ் அண்ட் கேப்பிட்டல் (Javeri Credits and capital), அத்வைத் இன்ப்ராடெக் (Advait Infratech), ஜென்சால் இன்ஜினியரிங் (gensol engineering) ,ஜேஐடிஎஃப் இன்ஃபிராலாஜிஸ்டிக்ஸ் (JITF Infralogistics), ராஜ் ரேயான் இண்டஸ்ட்ரீஸ் (raj Rayon industries), டீனா ரப்பர் (tina rubber), வேன்டேஜ் நாலேஜ் அகாடமி(vantage knowledge academy), சில்சர் டெக்னாலஜி (shilchar), என்ஐபிஈ(NIBE) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 5,0002 சதவீதத்திலிருந்து லாபத்தை பெற்று தந்துள்ளன.

தி எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் இந்த நிறுவனங்களில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு ரூ. 50 லட்சம் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கும். இருந்தாலும் இது போன்ற நிறுவனங்களை தேர்வு செய்யும்போது முதலீட்டாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் பங்குச்சந்தை நிபுணர்கள் விடுகின்றனர்.

Bigul நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அதுல் பராக் தற்போதைய சூழலில் முதலீட்டாளர்கள் அதிக லாபம் தருகிறது என்ற ஒரு காரணத்தை மட்டுமே கொண்டு ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். லார்ஜ் கேப் நிறுவனங்கள் குறைந்த லாபத்தை தருவதாக தோன்றினாலும் அதில் இருக்கக்கூடிய ஆபத்து என்பது மிகவும் குறைவு.

ஆனால் ஸ்மால் கேப் நிறுவனங்களில் அப்படி கிடையாது அதிக ஆபத்து நிறைந்த பங்குகள் ஸ்மால் கேப் பங்குகள் எனவே ஒரு நிறுவனத்தின் மதிப்பீடு என்ன, அது எந்த துறையில் இயங்குகிறது என்பதை கவனிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஐடி, வங்கி, சுகாதாரத் துறை என்பன உள்ளிட்ட அந்த நிறுவனம் சார்ந்த துறையையும் அந்தத் துறையின் வளர்ச்சி ஆகியவற்றையும் ஒப்பிட்டுதான் முதலீட்டு முடிவினை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+