பங்குச்சந்தை முதலீடுகளில் சரியான நிறுவனத்தை தேர்வு செய்து முதலீடு செய்வது என்பது ஒரு கலை. அதில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். அப்படித்தான் இந்த ஸ்மால் கேப் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கும் வெற்றி கிடைத்திருக்கிறது. Lloyds Metals & Energy (LMEL) என அழைக்கப்படும் ஸ்மால் கேப் நிறுவனம் தங்கள் முதலீட்டாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 9,250 சதவீதம் லாபத்தை பெற்று தந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு வெறும் 9 ரூபாய் அதுவே தற்போது 740 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. உதாரணமாக 2020 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் தற்போது அதன் மதிப்பு 82 லட்சம் என உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் பங்கு கணிசமான அளவு வளர்ச்சி பாதையிலேயே இருந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு 24 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் இதன் ஒரு பங்கு மதிப்பு 600 ரூபாய் என்ற அளவில் இருந்து தற்போது 740 என உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் தன்னுடைய செயல்பாடு மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்தி இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது . இது ஒரு உலோகங்கள் மற்றும் சுரங்க நிறுவனமாகும். இது இரும்புத்தாதினை எடுப்பது மற்றும் கடற்பாசி இரும்பை உற்பத்தி செய்வது மற்றும் மின்சாரம் தயாரிப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனம் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சூர்ஜகரில் இரும்புத்தாது சுரங்கம் அமைத்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வாடிக்கையாளர்களுக்கு இரும்பு தாதுக்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் அண்மையில் தான் சூர்ஜகரில் தங்களுடைய இரும்புத்தாது எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. இதனை அடுத்து தான் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
கூடிய விரைவில் இந்த நிறுவனம் பிராண்டட் ஹெமெடெட் குவார்டைஸ் (banded hematite quartzite) எனப்படும் இரும்புத்தாது உருவாகக்கூடிய பிராந்தியங்களில் மட்டுமே உருவாகும் ஒரு வகையான பாறையை தோண்டி எடுப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கிடைக்கும் பட்சத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 38,702 கோடி ரூபாய்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications