கடந்த சில ஆண்டுகளாக சாமானிய மக்கள் நிறுவன பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. பிக்சட் டெபாசிட் போன்ற சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் ஆதாயத்தை காட்டிலும் பங்குகளில் கூடுதலாக கிடைக்கும் என்பதை இதற்கு காரணம். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது செல்வத்தை உருவாக்குவதற்கான ஒரு வழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால முதலீடு அடிப்படையில் நல்ல பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்தால் அது நல்ல வருமானத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பங்கின் விலை எப்போது ஏறும் இறங்கும் என்று யாராலும் உறுதியாக கணிக்க முடியாது. உதாரணமாக சில நிறுவன பங்குகள் விலை நீண்ட காலமாக மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். ஆனால் திடீரென பங்குகள் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு தனது முதலீட்டாளர்களுக்கு அபரிதமான லாபத்தை கொடுத்துள்ளன.

மெர்குரி இவி-டெக் நிறுவன பங்கும் அப்படியொரு பங்கும். 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 9.900 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது. மெர்குரி இவி-டெக் நிறுவனம் மின்சார வாகன தயாரித்து வருகிறது. மேலும் இந்நிறுவனம், பேட்டரிகள், சேசிஸ் மற்றும் மோட்டார் கன்ட்ரோலர் போன்ற முக்கியமான பாகங்களையும் உற்பத்தி செய்கிறது. டிசி2 மெர்குரி கார்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
அண்மையில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாகன கண்காட்சியில், ஐரோப்பிய தரநிலைகளின்படி வடிவமைக்கப்பட்ட, பேட்டரி மூலம் இயக்கப்படும் 3 சக்கர இ ரிக்ஷா எல்5 வாகனத்தை டிசி2 மெர்குரி கார்ஸ் பிரைவேட் லிமிடெட் காட்சிக்கு வைத்தது குறிப்பிடத்தக்கது.
2022ம் ஆண்டு முதல் மெர்குரி இவி-டெக் நிறுவன பங்கின் விலை சீராக உயர்ந்து வருகிறது. இந்நிறுவன பங்கின் விலை ரூ.0.85-லிருந்து தற்போதைய விலையான ரூ.85ஆக உயர்ந்துள்ளது. ஆக, 3 வருடத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 9,900 சதவீதம் அதிகரித்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவன பங்குகளில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1 கோடியாக உயர்ந்திருக்கும். சரியான பங்கினை தேர்வு செய்து முதலீடு செய்தால், முதலீட்டாளர்களின் செல்வத்தை அபரிமிதமான வளர்ச்சி அடைய வைக்கும் திறன் பங்குச் சந்தைக்கு உள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
2022ல் மெர்குரி இவி டெக் நிறுவன பங்கின் விலை 1,300 சதவீதம் உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் இப்பங்கு 897 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயம் கொடுத்துள்ளது. இந்நிறுவனம் 2024 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1.60 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 171 சதவீதம் அதிகமாகும்.
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.19.48 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.5.52 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications