மல்டிபேக்கர் பங்கு: பங்குச் சந்தைகளில் சில பங்குகள் எதிர்பாராத வருமானத்தைத் தருகின்றன. அந்த வகையில், சில மல்டிபேக்கர் பங்குகளும் சிறப்பான நேரத்தில் சிறப்பான வருமானத்தை அதன் முதலீட்டாளார்களுக்கு வழங்குகின்றனர். இவை பைசாவிலிருந்து உயர்ந்து ரூபாய் வரை சாத்தியமான வருமானத்தையும் அளிக்கின்றன. அப்படி ஒரு பங்குதான் வெறும் 35 பைசாவிலிருந்து தொடங்கி இன்று ரூ.88 ஆக வளர்ந்து மல்டிபேக்கர் பங்கு ஆக வர்த்தகமாகி வருகிறது.
அந்த மல்டிபேக்கர் பங்கு தான் மெர்குரி EV-டெக் நிறுவனத்தின் பங்கு ஆகும். இது அதன் முதலீட்டாளர்களுக்கு பெரும் வருமானத்தை அளித்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் 25000% அதிகரித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, கடந்த டிசம்பர் 17, 2019 அன்று, பங்கின் விலை வெறும் 35 பைசாவாக இருந்தது. தற்போது 21 டிசம்பர் 2024 அன்று இந்தப் பங்கின் விலை ரூ.88.11ஐ எட்டியுள்ளது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் இந்தப் பங்குகளில் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது ரூ.2.50 கோடியாக உயர்ந்திருக்கும். சில நாட்களுக்கு முன்பு பங்கு ரூ.139.20 ஆக உயர்ந்து, புதிய 52 வார உச்சத்தை எட்டியது. பங்குகளின் 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூ.64.32 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1.67 ஆயிரம் கோடியாக உள்ளது.

இது நீண்ட காலத்திற்கு சிறப்பான வருமானத்தை அளித்துள்ளது. இந்த பங்கு குறுகிய காலத்தில் நல்ல வருமானத்தை தரவில்லை. கடந்த 5 நாட்கள் மற்றும் கடந்த ஒரு மாதமாக ஓரளவு நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 23% மீட்சியை காணப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 24 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது. டிசம்பர் 2022 வரை, பங்கின் விலை ரூ.10க்கும் குறைவாக இருந்தது. இதைத் தொடர்ந்து, பங்கின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களிலும் மல்டிபேக்கர் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளன.
மல்டிபேக்கர் பங்கு என்றால் என்ன?: மல்டிபேக்கர் பங்குகள் என்பது முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் சிறந்த வருமானங்களை அளிப்பவை. அதாவது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பங்கின் அடிப்படை விலை பல மடங்கு அதிகரித்தால், அது மல்டிபேக்கர் பங்கு எனப்படும். பங்குச் சந்தையில் இதுபோன்ற பல மல்டிபேக்கர் பங்குகள் உள்ளன.
பங்குச் சந்தையில் சில பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பணமழை பொழிகின்றன. நிறுவனங்களின் சிறிய அறிவிப்புகள் கூட பங்குகளின் விலையை உயர்த்துகின்றன. எனவே, சரியான நேரத்தில் சரியான பங்கைத் தேர்ந்தெடுத்து, நிபுணர் ஆலோசனையுடன் முதலீடு செய்தால், நீண்ட காலத்திற்கு நல்ல லாபத்தைப் பெறலாம் என்பதை பல பங்குகள் நிரூபித்துள்ளன. நீங்களும் உங்களுக்கான சிறந்த பங்குகளை தேர்ந்தெடுங்கள்
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications