மல்டிபேக்கர் NBCC இந்தியா பங்கு.. இன்று எக்ஸ்-போனஸ் கடைசி தேதி.. 2 பங்குகளுக்கு 1 பங்கு இலவசம்..!!

மும்பை பங்குச் சந்தையில் என்பிசிசி இந்தியா (NBCC INDIA) பங்குகள் இன்று 5 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் அறிவித்துள்ள போனஸ் பங்குகளை பெறுவதற்காக, நிர்ணயம் செய்யப்பட்ட நாள் இன்று என்பதால் முதலீட்டாளர்கள் அடித்துபிடித்து எக்ஸ் போனஸ் தேதியன்று பங்குகளை வாங்கி வருகின்றனர். இதனால் இன்றைய வர்த்தகத்தில் பங்குகளில் நல்ல ஏற்றத்தை பதிவு செய்துள்ளது.

கட்டுமானத் துறையை சேர்ந்த அரசுக்கு சொந்தமான நிறுவனம் இந்த என்பிசிசி லிமிடெட், இதன் இயக்குநர்கள் குழு சமீபத்தில் கூடி அதன் பங்குதாரர்களுக்கு 1:2 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்தது. அதன்படி, நிர்ணயம் செய்யப்பட்ட தேதியில் நிறுவனத்தின் இரண்டு ஈக்விட்டி பங்குகளை வைத்திருப்பவர் ஒரு கூடுதல் பங்கைப் போனஸாகப் பெறுவார்.

 மல்டிபேக்கர் NBCC இந்தியா பங்கு.. இன்று எக்ஸ்-போனஸ் கடைசி தேதி.. 2 பங்குகளுக்கு 1 பங்கு இலவசம்..!!

மேலும், இந்த போனஸ் பங்குகளை வெளியிடுவதற்கான பதிவுத் தேதியாக அக்டோபர் 07, 2024 என இயக்குநர்கள் குழு நிர்ணயித்துள்ளது. இன்று அக்டோபர் 07 என்பதால், இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று எக்ஸ்-போனஸின் கடைசி தேதியில் வர்த்தகம் செய்யப்படும். மறுபுறம், நிறுவனத்தின் பங்கு கடந்த ஓராண்டில் அதன் பங்குதாரர்களுக்கு 177 சதவீத லாபத்தை அளித்ததன் மூலம் மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. என்பிசிசி என்பது மத்திய அரசின் உரிமையின் கீழ் நவரத்னா அந்தஸ்து கொண்ட ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

5 சதவீதம் அதிகரித்த பங்குகள்: இன்று என்பிசிசி இந்தியா பங்குகள் கடைசி வர்த்தகத்தின் இறுதி விலையான ரூ. 112.67 இலிருந்து 4 சதவீதத்திற்கும் மேலாக ரூ. 118.10 இல் திறக்கப்பட்டன. என்பிசிசி இந்தியாவின் 52 வார உயர்ந்தபட்ச விலை ரூ.209.75 ஆகவும், 52 வாரக் குறைந்தபட்ச விலை ரூ.57.50 ஆகவும் உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 21,260 கோடியாக உள்ளது.

NBCC நிறுவனம் 1:2 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வெளியிடும்
ஆகஸ்ட் 31, 2024 அன்று, நிறுவனம் ஒரு வாரியக் கூட்டத்தை நடத்தியது. நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சமீபத்தில் 1:2 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது ஒவ்வொரு இரண்டு (2) வெளியிடப்பட்ட பங்குகளுக்கும் ஒரு (1) புதிய ஈக்விட்டி பங்கு வழங்கப்படும். இந்த போனஸ் பங்குகளை வெளியிடுவதற்கு தகுதியான பங்குதாரர்களை நிர்ணயம் செய்வதற்கான பதிவு தேதியாக அக்டோபர் 07, 2024 அன்று நிறுவனம் நிர்ணயித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட தேதியின்படி டிமேட் கணக்கில் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த போனஸ் பங்குகள் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக, பங்குதாரர்கள் எந்தவிதமான கட்டணமோ அல்லது செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

போனஸ் வெளியீட்டில் பங்கு ஒன்றுக்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட மொத்தம் 90,00,00,000 ஈக்விட்டி பங்குகள் வெளியிடப்படும் என்று நிறுவனம் தனது தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. நிறுவனம் போனஸை 31 அக்டோபர் 2024 அல்லது அதற்கு முன் வெளியிடலாம்

ஒரு வருடத்தில் மல்டிபேக்கர் ரிட்டர்ன்: என்பிசிசி இந்தியா ஒரு மல்டிபேக்கர் பங்கு ஆகும். கடந்த ஒரு வருடத்தில் அதன் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான வருமானத்தை அளித்து அதன் பணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக அதில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில், இந்த பங்கு 33 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவை பதிவு செய்துள்ளது. கடந்த 6 மாதங்களில் கிட்டத்தட்ட 15 சதவீதம் சரிந்துள்ளது. ஒரு வருட காலப்பகுதியில், இந்த பங்கு அதன் முதலீட்டாளர்களுக்கு 250 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை அளித்துள்ளது.

இலக்கு விலை:மறுபுறம், முன்னணி தரகு நிறுவனங்களான நுவாமா மற்றும் ஜியோஜித் ஆகியவை பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு என்பிசிசி லிமிடெட் பங்குக்கான வாங்குதல் மதிப்பீட்டுடன் இலக்கு விலையை வழங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக இந்த நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு ரூ. 198 இலக்கு விலையை கொடுத்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+