பங்குச் சந்தைகளில் சமீபகாலமாக சிறப்பாக செயல்படாத பங்குகளுக்கு மத்தியில் ஒரு சில பங்குகள் சிறப்பான வருவாயை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகின்றன. அந்த வகையில், சில பங்குகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் அற்புதமான வருமானத்தை வழங்குகின்றன. அதில் குறிப்பாக மல்டிபேக்கர் பங்குகள் சில ஆண்டுகளில் எக்கசக்க வருமானங்களை அள்ளி கொடுத்துள்ளது. அத்தகைய ஒரு பங்குதான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 7500 சதவீதம் அதிகரித்து அதன் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருவாயை வழங்கியுள்ளது.
அந்த பங்குதான் பிடிசி இண்டஸ்ட்ரீஸ். இந்த பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை எதிர்பாராத விதத்தில் அதிகரிக்கச் செய்துள்ளது. அதேபோல், மல்டிபேக்கர் ஆக மாறி சிறப்பான வருமானத்தை அளித்துள்ளது. இந்த பங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 7500% அதிகரித்துள்ளது. அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.76 லட்சமாக உயர்த்திருக்கும். தற்போது இந்த பங்கின் விலை ரூ.11,507 ஆக உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 77 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் 102 சதவீதம் அதிகரித்து, முதலீட்டாளர்கள் மல்டிபேக்கர் வருமானத்தைப் பெற்றுள்ளனர்.

டிசம்பர் 2019 இல், இந்தப் பங்கின் விலை வெறும் ரூ.150க்குக் கிடைத்தது. இதுவரை அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் 75 முறை வருமானம் கொடுத்துள்ளது. அதாவது, 5 ஆண்டுகளில் பங்கின் விலை ரூ.150ல் இருந்து ரூ.11,500 ஆக அதிகரித்துள்ளது. 2019-ல் இந்தப் பங்குகளில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இப்போது 76 லட்சமாக உயர்ந்திருக்கும்.
இந்த பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பங்குகளை வாங்குவது அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம் சமீபத்தில் டிராக் பிரசிஷன் சொல்யூஷன்ஸ்-ஐ (Track Precision Solutions)வாங்கியது. நிறுவனம் டிசம்பர் 19 அன்று அறிவித்தது. அதன்படி, டிராக் பிரசிஷன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 100% பங்குகளை வாங்கியுள்ளது. இந்த பங்கு கொள்முதல் ஒப்பந்தம் அக்டோபர் 18, 2024 அன்று போடப்பட்டது. ப்ரோக்கரேஜ்கள் பங்குக்கு வாங்க மதிப்பீட்டைக் கொடுத்து, அதை வாங்குவதற்கு பரிந்துரைக்கின்றன. எனவே, இந்தப் பங்கின் இலக்கு விலையும் அதிகரித்துள்ளது. இந்த பங்கு 23-12-2024 நிலவரப்படி, வர்த்தக முடிவில் 6.85% அதிகரிப்புடன் பங்கு விலை ரூ.12,390 ஆக முடிந்தது.
மல்டிபேக்கர் பங்கு என்றால் என்ன?: சில பங்குகள் குறுகிய காலத்தில் அவற்றின் அசல் விலை பல மடங்கு உயர்கிறது. அத்தகைய பங்குகள் மல்டிபேக்கர் பங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அத்தகைய பங்குகளை அடையாளம் காண, அந்தந்த நிறுவனங்களின் செயல்திறன், முடிவுகள், அறிவிப்புகள், முதலீட்டு உத்திகள் மற்றும் திட்டங்களைக் கவனமாகக் கவனிக்க வேண்டும். மேலும், நிதி நிபுணரின் ஆலோசனையுடன் சரியான நேரத்தில் சரியான பங்குகளில் முதலீடு செய்தால் சில வருடங்களிலேயே பெரும் லாபத்தைப் பெறலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications