இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் மீண்டும் ஒருமுறை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நேரத்தில் சில பங்குகள் நல்ல லாபத்தை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் பங்குகள் மிகப் பெரிய அளவில் ஏற்றம் கண்டு அதன், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பங்கு கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தை அளித்து வருகிறது.
இந்திய பங்குச்சந்தையில் முதலீடு சமீபகாலமாக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, லோக்சபா தேர்தலுக்கு பின், கடந்த சில நாட்களாக, பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில், பங்குச் சந்தை குறியீடுகள் எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளன. திங்கட்கிழமை வர்த்தகத்திலும் பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 384 புள்ளிகள் உயர்ந்து 84,929 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 148 புள்ளிகள் அதிகரித்து 25,939 புள்ளிகளாக உள்ளது.
பங்குச் சந்தை ஏற்றத்திற்கு மத்தியில், சில பங்குகள் முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை அளித்து வருகின்றன.
ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லிமிடெட் (ACE) அத்தகைய மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாகும். வெறும் 7 ரூபாயில் கிடைத்த இந்தப் பங்கு தற்போது 1440 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த பங்கு கடந்த சில ஆண்டுகளாக அதன் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது.

வலுவான அடிப்படைகள், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் தொழில்துறை தலைமை ஆகியவை பங்கு வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்த மாதிரியான செயல்பாட்டால், சில வருடங்களாக இந்த பங்குகள் நல்ல வருமானத்தை அளித்து வருவதால், பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நிறுவனம் பொருள் கையாளுதல் மற்றும் கட்டுமான உபகரணங்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக நடமாடும் கிரேன்கள் மற்றும் டவர் கிரேன்கள் துறையில் தலைமைத்துவம் பெற்றுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.74க்கு கிடைத்த பங்கின் விலை தற்போது ரூ.1444.80 ஆக உள்ளது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் இந்தப் பங்கு 2000% அதிகரித்துள்ளது. இந்த பங்கு கடந்த 11 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை பணக்காரர்களாக்கியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பங்கின் விலை ரூ.7.65 மட்டுமே இருந்தது அதன்பிறகு, இந்த பங்கு 20,000% அதிகரித்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில், இரண்டே ஆண்டுகளில் மட்டுமே இந்த பங்கு நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு (2024) இதுவரை 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தப் பங்கின் இதுவரை இல்லாத அளவு ரூ.1695 ஆக உள்ளது 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூ.653.75 ஆக உள்ளது இதன் சந்தை மதிப்பு ரூ.17.22 ஆயிரம் கோடி உள்ளது. இதற்கிடையில், நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் பங்குகள் 3.48% உயர்ந்து ரூ.1440 ஆக வர்த்தகம் செய்தது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications