ஷாலிமார் ஏஜென்சீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெயர், ஸ்பைஸ் லவுஞ்ச் ஃபுட் ஒர்க்ஸ் லிமிடெட் என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11, 2025 முதல் இந்த பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஸ்க்ரிப் ஐடி மற்றும் ஷார்ட் வெர்ஷன் SPICELOUNG என BOLT Plus சிஸ்டத்தில் மாற்றப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றம் LODR ஒழுங்குமுறைகள் 2015-க்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளது என நிறுவனம் பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது.

பங்கு விலை நிலவரம்
இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும், பிஎஸ்இ-யில் ரூ.37.95 என்ற விலையில் சரிவுடன் காணப்பட்டது. இது 2% குறைந்த சர்க்யூட் வரம்பாகும். கடந்த வர்த்தக அமர்வில், பங்கு ரூ.38.72-ல் நிறைவடைந்தது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.2,645.58 கோடி ஆகும். ஆகஸ்ட் 5, 2025 அன்று ரூ.41.13 என்ற 52 வார உச்சத்தை எட்டியது. அதேசமயம், 52 வார குறைந்தபட்ச விலையாக ரூ.37.95 உள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக, இந்த பங்கு 20, 50, 100 மற்றும் 200 நாள் மூவிங் அவரேஜ்-க்கு மேல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இருப்பினும், 5 நாள் மூவிங் அவரேஜ்-க்கு குறைவாக உள்ளது. கடந்த 4 நாட்களாக சரிவை சந்தித்து வரும் இந்த பங்கு, இந்த காலகட்டத்தில் 7.73% சரிந்துள்ளது.
பங்கு வரலாற்று செயல்திறன்
பிஎஸ்இ தகவலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த பங்கு 3143.59% என்ற பல மடங்கு வருவாயை அளித்துள்ளது. ஒரு வருடத்தில் 747.10% வருமானத்தை அளித்து முதலீட்டாளர்களுக்கு பண மழை கொட்டியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை, முதலீட்டாளர்களுக்கு 296.97% லாபம் ஈட்டித் தந்துள்ளது. எனினும், ஒரு வாரத்தில் 5.90% சரிவை சந்தித்துள்ளது.
இன்றைய பங்குச் சந்தை நிலவரம்
இன்றைய வர்த்தகத்சில் இந்தியப் பங்குச் சந்தைகள் நேர்மறையான போக்குடன் வர்த்தகத்தைத் தொடங்கினாலும் சரிவுடன் முடிந்துள்ளது. புதிய வெளிநாட்டு நிதி வரவுகளால் இந்த ஏற்றம் காணப்பட்டது. காலை வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 80,997.67 புள்ளிகளை தொட்டாலும் , வர்த்தகம் முடியும் போது 368.49 புள்ளிகள் சரிந்து 80,235.59 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிந்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications