4 ஆண்டுகளில் 1113% லாபம் தந்த ஸ்மால் கேப் பங்கு.. முதலீடு செய்யலாமா?

ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி(HCC) என்ற ஸ்மால் கேப் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் 1113 % லாபத்தை பெற்று தந்து முதலீட்டாளர்களை பணமழையில் நனைய வைத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூ.4.04 என இருந்தது. அதுவே தற்போது ரூ.53 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1113 % லாபத்தை இந்த பங்கு பெற்று தந்துள்ளது. கடந்த 3 ஆண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 391% உயர்ந்துள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதன் ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 என இருந்தது. ஓராண்டு காலத்தில் மட்டும் இது 153 % லாபத்தை பெற்று தந்துள்ளது.

4 ஆண்டுகளில் 1113% லாபம் தந்த ஸ்மால் கேப் பங்கு.. முதலீடு செய்யலாமா?


2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை இந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 83.5% லாபத்தை பெற்று தந்துள்ளது. குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் இது 41% வளர்ச்சி அடைந்துள்ளது.

HCC நிறுவன பங்கின் 52 வார காலம் உச்சபட்ச மதிப்பு ரூ.53.40 ,அதுவே 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு ரூ.17.84 ஆகும். HCC நிறுவனம் பல்வேறு கட்டுமான சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனமாக இருக்கிறது.

இது இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் செயல்பட்டு வருகிறது. சாலை கட்டமைப்புகள் ,மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே பாதைகள் ,மெட்ரோ ரயில் பாதைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கட்டித் தரக்கூடிய ஒரு நிறுவனம் இது.

அணைகள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட பணிகளையும் இந்த நிறுவனம் எடுக்கிறது. சுங்கச்சாவடிகள் மேலாண்மை, ரியல் எஸ்டேட், காப்பீடு, தகவல் தொழில்நுட்ப ஆலோசனை என இந்த நிறுவனம் பல்வேறு துறைகளிலும் கால் பதித்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் 2023 - 24 ஆம் ஆண்டில் 529 கோடி ரூபாய் லாபம் எடுத்துள்ளது. Elara Securities தரகு நிறுவனம் இந்த பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.63 வரை உயரக்கூடும் என்றும் கணிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக நிறுவனத்தின் நிதிநிலைமை சீராகி வருவதாகவும் கடன் அளவானது 6200 கோடி ரூபாயிலிருந்து 3400 கோடி ரூபாய் என குறைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

ICICI Direct தரகு நிறுவனம் தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சராசரியை விட அதிக அளவில் வர்த்தமாகி வருவதாக கூறுகிறது. நிறுவனத்தின் பங்கு மதிப்பு வளர்ச்சி பாதையிலேயே இருக்கிறது என்றும் இருந்தாலும் கடந்த காலாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் தங்களின் பங்குகளை குறைத்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+