ரூ.10000 முதலீடு ரூ.6.9 லட்சமாக மாற்றிய மல்டிபேக்கர் 'காண்டம் நிறுவன' பங்கு.. !

கடலில் முத்து எடுப்பது எந்தளவுக்குக் கஷ்டமோ அதைவிடக் கஷ்டம் இந்தியப் பங்குச்சந்தையில் மல்டிபேக்கர் பங்குகளைத் தேடி கண்டுப்பிடிப்பது. உங்க போர்ட்போலியோவில் 1-2 மல்டிபேக்கர் பங்குகள் சேர்த்துவிட்டால் போலும் லைப் டைம் செட்டில்மென்ட் போல பணமழை கொட்டும்.

அப்படிப்பட்ட ஒரு மல்டிபேக்கர் பங்கு குறித்துத் தான் நாம் பார்க்கப்போகிறோம். க்யூபிட் லிமிடெட் என்ற இந்த நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் 569 சதவீதமும், 3 வருடத்தில் 6775 சதவீதம் அளவில் வளர்ச்சி அடைந்து இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ரூ.10000 முதலீடு ரூ.6.9 லட்சமாக மாற்றிய மல்டிபேக்கர் 'காண்டம் நிறுவன' பங்கு.. !

க்யூபிட் நிறுவனம் (Cupid Limited) இந்தியாவின் முன்னணி பாலியல் ஆரோக்கியம் மற்றும் நுகர்வோர் நலன் சார்ந்த பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு என்றால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என இருபாலருக்கும் காண்டம் தயாரித்து வருகிறது.

1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

10 வருடத்திற்கு முன்பு இந்நிறுவனத்தின் பங்கு விலை 10 ரூபாய்க்கும் குறைவாக இருந்த நிலையில் இன்று 279.15 ரூபாய் விலையில் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில் இந்நிறுவனத்தில் 3 வருடங்களுக்கு முன்பு 10000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது 6775.62 சதவீத வளர்ச்சியில் தற்போது இந்த முதலீடு 6.9 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

ஆனால் மல்டிபேக்கர் பங்குகளில் இருக்கும் முக்கியமான சிக்கலே அதன் ஆரம்ப நிலையில் கண்டறிவது தான், இன்றைய வர்த்தகத்தில் க்யூபிட் நிறுவன பங்கு விலை 0.29 சதவீதம் சரிந்து 279.15 ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 37,536.20 கோடி ரூபாயாக உள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி க்யூபிட் நிறுவனப் பங்குகள் 52 வார உயர்வான 298.95 ரூபாய் அளவீட்டைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

க்யூபிட் நிறுவனத்தின் ROE 42.85 சதவீதமாக உள்ளது. 1 வருட, 3 வருட வளர்ச்சியைத் தாண்டி கடந்த 3 மாதத்தில் 68 சதவீதமும், 6 மாதத்தில் 252 சதவீதமும், 2026ல் 165 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது. இந்த பங்கை ஏற்கனவே நீங்கள் வாங்கியிருந்தால் சூப்பர், இதுவரை வாங்கவில்லை எனில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இந்தியப் பங்குச்சந்தை தற்போது பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் வேளையில் எந்தொரு மல்டிபேக்கர் பங்குகளையும் தற்போது வர்த்தக சூழ்நிலையில் நம்ப முடியாது என்பதால் யோசித்து முதலீடு செய்யுங்கள். க்யூபிட் நிறுவனம் ஜூன் காலாண்டில் 44.16 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்துள்ளது, மார்ச் காலாண்டில் 36 கோடி ரூபாய் பதிவு செய்திருந்த நிலையில் அதிரடியாக 3 மாதத்தில் உயர்வடைந்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+