இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில தினங்களாக தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. பல நிறுவன பங்குகளின் விலை புதிய உயரத்தை எட்டியுள்ளன. இதனால் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் சந்தோஷ வானில் சிறகடித்து பறக்கின்றனர்.
இதற்கு மத்தியில் சூரிய மற்றும் காற்றாலை மின்உற்பத்தி துறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சுரானா டெலிகாம் அண்ட் பவர் லிமிடெட் நிறுவன பங்கு குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களின் பணத்தை பல மடங்கு பெருக்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு பென்னி ஸ்டாக்காக இருந்த இந்நிறுவன பங்கு இன்று ஒரு மல்டிபேக்கர் பங்காக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரானா டெலிகாம் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம், சூரிய மற்றும் காற்றாலை மின்உற்பத்தி, ஆப்டிகல் பைபர் கேபிள்கள், சி.டி.எம்.ஏ. மொபைல் போன்கள், மின் கேபிள்கள் போன்றவற்றையும் தயாரித்து வருகிறது.
4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலத்தில் இந்நிறுவன பங்கின் விலை மிக மிக குறைவாகவே இருந்தது. ஆனால் அடுத்து வந்த ஆண்டுகளில் இப்பங்கின் விலை யாரும் நினைத்து பார்க்காத அளவுக்கு உயர்ந்து முதலீட்டாளர்களின் பணத்தை பல மடங்கு பெருக்கியுள்ளது.
2020 ஜூனில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.2.95 என்ற அளவில் இருந்தது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கு விலை 52 வார புதிய உச்ச விலையான ரூ.26.57ஐ எட்டியுள்ளது. ஆக, கடந்த 4 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 800 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் சுரானா டெலிகாம் அண்ட் பவர் லிமிடெட் நிறுவன பங்கு விலை 494 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் பணத்தை 259 சதவீதம் பெருக்கியுள்ளது. இப்பங்கின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 172 சதவீதமும், இந்த ஆண்டில் இதுவரை 56 சதவீதமும் அதிகரித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் 4 மாதங்கள் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. இந்நிறுவன பங்கின் விலை சும்மா ஒன்றும் திடீரென உயர்ந்து விடவில்லை, பங்கின் விலை உயர்வின் பின்னணியில் இந்நிறுவனத்தின் லாபம், வருவாய் வளர்ச்சி உள்ளிட்ட சில வலுவான செயல்பாடுகள் உள்ளன.
உதாரணமாக 2024 மார்ச் காலாண்டில் சுரானா டெலிகாம் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக ரூ.5.23 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 549 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.80 லட்சம் மட்டுமே ஈட்டியிருந்தது.
மேலும் கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் இரு மடங்கு அதிகரித்துள்ளது. 2023 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.5.33 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. கடந்த 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.10.68 கோடி ஈட்டியிருந்தது.
சுரானா டெலிகாம் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து தொடர்ந்து தனது லாப வரம்புகளை மேம்படுத்து வருகிறது. இது இந்நிறுவனத்துக்கு சாதகமான அம்சம் என்று பங்கு தரகு நிறுவனமான ஐசிஐசிஐ டைரக்ட் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பென்னி பங்காக இருந்த சுரானா டெலிகாம் அண்ட் பவர் லிமிடெட் பங்கு தற்போது மல்டிபேக்கர் பங்காக உருவெடுத்துள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications