குவெஸ் கார்ப் நிறுவனம் நாட்டின் முன்னணி வணிக சேவை வழங்குநராக உள்ளது. இந்நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக தனது நிறுவனத்தை மூன்று தனித்துவமான பொது நிறுவனங்களாக பிரிக்க முடிவு செய்தது. குவெஸ் கார்ப், டிஜிடைட் சொல்யூஷன்ஸ் மற்றும் ப்ளஸ்பிரிங் என்டர்பிரைசஸ் என 3 நிறுவனங்களாக பிரிக்கப்பட உள்ளது. நிறுவன பிரிப்புக்கு என்சிஎல்டி-யிடமிருந்தும் ஒப்புதல் பெற்று விட்டது. தற்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிறுவனங்கள் பிரிப்புக்கான பதிவு தேதியையும் குவெஸ் கார்ப் அறிவித்துள்ளது.
குவெஸ் கார்ப் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், 2025 ஏப்ரல் 15ம் தேதி நிறுவன பிரிப்பதற்கான பதிவு தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குவெஸ் கார்ப் பங்குதாரர்கள் நிறுவனத்தில் அவர்கள் வைத்திருக்கும் அதே விகிதத்தில் டிஜிடைடு மற்றும் ப்ளஸ்பிரிங் பங்குகளை பெறுவார்கள்.

பங்கு பிரிப்பில் வரும் நிறுவனங்களான டிஜிடைட் மற்றும் ப்ளஸ்பிரிங் ஆகியவை அடுத்த இரண்டு மாதங்களில் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-ல் வர்த்தகத்தை தொடங்க வாய்ப்புள்ளது. இது ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதிதாக உருவாக உள்ள டிஜிடைட் மற்றும் ப்ளஸ்பிரிங் புதிய இயக்குனர்கள் குழு மற்றும் தலைமை குழுக்களை குவெஸ் கார்ப் அறிவித்தது.
இந்த தகவலையடுத்து மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 7 சதவீதத்துக்கு மேல உயர்ந்து ரூ.707.50 வரை சென்றது. கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தபோதிலும், குவெஸ் கார்ப் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 14 சதவீதம் அதிகரித்தது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 3 சதவீதம் வளர்ச்சி கண்டது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 222 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
குவெஸ் கார்ப் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.15,571 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.343 கோடி ஈட்டியுள்ளது. கடந்த 2024 செப்டம்பர் காலாண்டில் குவெஸ் கார்ப் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,382 கோடியாகவும், நிகர லாபமாக ரூ.152 கோடியாகவும் இருந்தது.
2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.4,708 கோடியும், நிகர லாபமாக ரூ.99.68 கோடியும் ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் குவெஸ் கார்ப் நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் (இபிஎஸ்) ரூ.6.71ஆக இருந்தது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டில் ரூ.10.09ஆக இருந்தது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications