இந்திய பங்கு சந்தையில் சமீப காலமாக அதிக லாபத்தை ஈட்டித் தந்த பங்குகளில் ரெஸ்பான்ஸிவ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் பங்கும் ஒன்றாகும். முதலீடு செய்த ஒரே ஆண்டில் அதன் மதிப்பு இரட்டிப்பானது. முதலீட்டாளர்களுக்கு 100 சதவீத லாபத்தை ஈட்டித் தந்தது. இருப்பினும் அந்த பங்குகளின் விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தபோதும் ரெஸ்பான்ஸிவ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை உயர்விலேயே தொடங்கி ரூ.241.60 ஐ தொட்டது. தேசிய பங்குச்சந்தையில் இன்று அதிகப்படியாக ரூ.248.75 அளவில் உயர்ந்தது. மேலும் அதன் வரலாற்று உச்ச அளவு ரூ.249.25க்கு முடிவடைந்தது.

கோவிட்டுக்கு பின்னர் இந்த மல்டிபேக்கர் பங்கு முதலீட்டாளர்களுக்கு கொழுத்த லாபத்தைத் தந்தது. கோவிட் காலத்தில் ரூ.75 ஆக இருந்த பங்கு விலை இப்போது பன்மடங்கு அதிகரித்து விட்டது. 2023-24 நிதியாண்டில் இந்த பங்கு விலை ஏறுமுகத்தில் காணப்படுகிறது. FY24இல் ரூ.110இல் இருந்து ரூ.240 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 120 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதத்தில் 100 சதவீத வருவாயை பங்குதாரர்களுக்கு அளித்துள்ளது. கடந்த ஓராண்டில் 65 சதவீதத்தையும் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப் பெரிய வருவாயையும் தந்துள்ளது. மொத்தம் 220 சதவீத லாபத்தை பங்குதாரர்களுக்கு அளித்துள்ளது.
இந்த மல்டிபேக்கர் பங்கு தேசிய பங்குச்சந்தையிலும் பம்பாய் பங்குச் சந்தையிலும் வர்த்தகமாகிறது. அதன் நடப்பு டிரெட் அளவு 6.40 லட்சமாக உள்ளது. 52 வாரத்தில் அதிகபட்சமாக ரூ.249.25 ஐ எட்டியது.
குறைந்த மதிப்புள்ள மல்டிபேக்கர் பங்குகளில் முதலீட்டாளர்கள் பணத்தை செலுத்தினால் கூடுதல் வருவாயை குறைந்த காலகட்டத்தில் பெறலாம் என்பதற்கு ரெஸ்பான்ஸிவ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் பங்கு நல்லதொரு உதாரணமாகும்.


Click it and Unblock the Notifications