2 நிறுவனங்கள் பங்கு பிரித்தல் திட்டம்.. பங்கு விலை இனி என்னவாகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீ செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 26.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது முந்தைய அமர்வில் இருந்து 4.81% ஏற்றத்தில் இருந்தது. இது முந்தைய அமர்வில் 24.95 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

 

இந்த மல்டிபேக்கர் பங்கு விலையானது கடந்த 5 ஆண்டுகளில் 109% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.

இதே கடந்த 1 வருடத்தில் 17.42% ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் 11.85% ஏற்றத்தில் காணப்படுகிறது.

வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் முக்கிய 10 காரணிகள்.. கவனிக்க வேண்டியது என்ன?வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் முக்கிய 10 காரணிகள்.. கவனிக்க வேண்டியது என்ன?

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இந்த பங்கின் 52 வார உச்சம் 34.05 ரூபாயாகும். இது கடந்த டிசம்பர் 6ம் தேதியன்று தொட்டது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 16.90 ரூபாயினை எட்டியது. இது கடந்த நவம்பர் 1 அன்று எட்டியது. இப்பங்கின் விலையானது அதன் 1 வருட உச்சத்தில் இருந்து 23.20% சரிவில் காணப்படுகின்றது. இதே 1 வருட குறைந்தபட்ச விலையில் இருந்து பார்க்கும்போது 54.73% ஏற்றத்தில் காணப்படுகின்றது.

மூவிங் ஆவரேஜ்

மூவிங் ஆவரேஜ்

இந்த பங்கு விலையானது 5 நாள்,10 நாள் மூவிங் ஆவரேஜ்-க்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் 20 நாள், 50 நாள் மூவிங் ஆவரேஜ்-க்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதே இரண்டாவது காலாண்டில் புரோமோட்டர் வசம் 30.63% பங்கும், பொதுமக்கள் வசம் 69.37% பங்கும் இருந்தது. இந்த பங்கின் புத்தக மதிப்பு 3.15 ஆகவும் உள்ளது.

கேபிஎஸ் இந்தியா
 

கேபிஎஸ் இந்தியா

இதே மற்றொரு மல்டிபேக்கர் பங்கான கேபிஎஸ் இந்தியா ஒரு ஸ்மால் கேப் நிறுவனமாகும். நிதிச் சேவை நிறுவனமான இது, 1:10 என்ற விகிதத்தின் பங்கு பிரித்தல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்கின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 116 ரூபாயாக முடிவடைந்தது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையில் இருந்து 4.46% அதிகரித்துள்ளது. இது முந்தைய அமர்வில் 111.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

மல்டிபேக்கர் பங்கு

மல்டிபேக்கர் பங்கு

இந்த மல்டிபேக்கர் பங்கு விலையானது கடந்த 5 வருடங்களில் 3383.48% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த 20, 2021 அன்று 10.59 ரூபாயாக உச்சம் தொட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு கடந்த 1 வருடத்தில் 995.37% ஏற்றம் கண்டுள்ளது.

இப்பங்கின் விலையானது கனவரி 3 அன்று தற்போதைய சந்தை மதிப்பில் இருந்து இது வரையில் 1118.49% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 6 மாதங்களில் இப்பங்கின் விலையானது 868.28% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 1 மாதத்தில் 20.27% ஏற்றமும் கண்டுள்ளது. இதன் 52 வார உச்சம் 142.50 ரூபாயாக டிசம்பர் 7 அன்று தொட்டது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 8.65 ரூபாயாக கடந்த ஆண்டு டிசம்பர் 28 அன்று தொட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Multibagger stock rises over 1000%: Both Shree Securities and KBS India received board approves for the share split

Shree Securities Ltd. and another multipacker stock KPS India is a small cap company.
Story first published: Sunday, December 18, 2022, 21:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X