ரூ.8.86 டூ ரூ.886.. 20 வருட லாப பயணம்.. மல்டி பேக்கர் பங்கின் இன்றைய நிலவரம்?

நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுத்த தரமான பங்குகளில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ்-ம் ஒன்று. கடந்த ஒரு மாதமாக இந்த பங்கின் விலை அழுத்தத்தில் காணப்படுகின்றது.

எனினும் இது லாபகரமான பங்காகத் தான் உள்ளது. இந்த பங்கில் ஏற்கனவே ஆர்டர்கள் இருந்தால் அதனை அப்படியே வைத்திருங்கள். விலை குறைகிறது என்பதால் விற்க வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த பங்கில் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு வேற லெவல் எனலாம். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் அதன் பங்கு விலையானது 8.86 ரூபாயில் இருந்து 886.75 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆறு மாதத்தில் எவ்வளவு லாபம்

ஆறு மாதத்தில் எவ்வளவு லாபம்

கிட்டதட்ட 100 மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் இந்த பங்கில் கிடைத்த லாபத்தினை புக் செய்ய முதலீட்டாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் இந்த பங்கின் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்த பங்கின் விலையானது 612 ரூபாயில் இருந்து 886 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 45% இந்த பங்கின் விலை அதிகரித்துள்ளது.

ஓராண்டில் எவ்வளவு லாபம்

ஓராண்டில் எவ்வளவு லாபம்

இதே கடந்த ஓராண்டில் இந்த பங்கின் விலையானது 56% அதிகரித்து, 567 ரூபாயில் இருந்து, 886 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது 115% அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சுமார் 380 ரூபாய் என்ற லெவலில் இருந்து 886 ரூபாயாக அதிகரித்துள்ளது.

20 ஆண்டு நிலவரம் என்ன?

20 ஆண்டு நிலவரம் என்ன?

இதே 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பங்கின் விலையானது 8.86 ரூபாயில் இருந்து ( நவம்பர் 2, 2001) 886.75 ரூபாயாக ( நவம்பர் 29, 2021) அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 100 மடங்கு அதிகரித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால், இன்று உங்களின் முதலீடும் பல மடங்காக பெருகியிருக்கும்.

பல லட்சம் லாபம்

பல லட்சம் லாபம்

இந்த நிறுவனத்தில் 1 மாதத்திற்கு முன்னதாக 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 91,000 ரூபாயாகும். இதே 6 மாதத்திற்கு முன்பு முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 1.45 லட்சம் ரூபாயாகும். இதே 1 வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 1.56 லட்சம் ரூபாயாகும். இதே 5 வருடம் எனில், இன்ரு அதன் மதிப்பு 2.15 லட்சம் ரூபாயாகும். 20 வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல்.

இன்னும் அதிகரிக்கலாம்

இன்னும் அதிகரிக்கலாம்

இந்த அளவுக்கு இந்த பங்கின் விலையானது அதிகரித்துள்ளதே என்ன காரணம்? இது இன்னும் அதிகரிக்குமா? என்றால், அதிகரிக்கலாம் என லைவ் மின்ட் ஆய்வறிக்கைகள் கூறுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+